ஒரு திரைப்படத்தில் கூட இணைந்து நடிக்காத டி ராஜேந்திரன் மற்றும் கவுண்டமணி..! இணையத்தில் லீக்கான உண்மைகள்..!

தமிழ் சினிமாவில் காமெடி கதாபாத்திரத்தில் அசைக்கமுடியாத இடத்தைப் பெற்றவர் தான் நடிகர் கவுண்டமணி இவர்  தன்னுடைய சிறந்த நடிப்பு மற்றும் நகைச்சுவை மூலமாக ஏகப்பட்ட ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார்.

இவ்வாறு நடிகர் கவுண்டமணி அவர்கள் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பல காமெடி கதாபாத்திரத்தில் நடித்தது மட்டுமல்லாமல் சில முக்கிய காமெடிகளை பார்த்து வியந்து போய் விட்டார். அந்தவகையில் இன்று உள்ள சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இவருடைய காமெடிக்கு மயங்காத ரசிகர்களே கிடையாது.

இவ்வாறு பிரபலமான நமது கவுண்டமணி இதுவரை டி ராஜேந்திரன் திரைப்படத்தில்  ஒருமுறை கூட இணைந்து கிடையாது. இவ்வாறு இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து நடிக்காமல் இருப்பதற்கு ஒரு காரணமும் இருக்கிறது என சமூக வலைதளப் பக்கத்தில் பேசப்பட்டு வருகிறது.

பொதுவாக கவுண்டமணி அவர்கள் சாதாரணமாக படப்பிடிப்புத் தளத்தில் இருக்கும் அனைவரையும் கிண்டல் செய்வது நாட்கள் செல்வது வழக்கம் தான். இந்த ஒரே காரணத்தினால் தான் கவுண்டமணியை நக்கல் மன்னன் என்று பலரும் கூறி வருகிறார்கள். ஆனால் டி ராஜேந்திரன் அவர்கள் அடுக்குமொழி வசனம் பேசும் நடிகர் ஆவார்.

இவ்வாறு இவர்கள் இருவருக்கும் எப்படி ஒத்துப்போகும். இது ஒரு பக்கம் இருக்க டி ராஜேந்திரன் அவர்கள் தனக்கு எப்போது எப்படிப்பட்ட காட்சிகளை எடுத்த தோன்றுகிறதோ அப்போதெல்லாம் அந்த காட்சிகளை படமாக்குவார்.  அப்போது பட காட்சிக்கு தேவையான பிரபலங்களை உடனடியாக ஆஜர்படுத்த சொல்வார்.

ஆனால் கவுன்டமனியோ பம்பரம் போல சுழன்று நடிக்கும் நடிகர் ஆகையால் இவருக்கும் அவருக்கும் செட் ஆகாது அதுமட்டுமில்லாமல் இப்படி இருக்கும் நிலையில் டி ராஜேந்திரன் மற்றும் கவுண்டமணி ஆகிய இருவருக்கும் இணைந்து நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை அதனால்தான் அவர்கள் இணைந்து நடிக்கவில்லை என கூறப்படுகிறது.

Leave a Comment