சியான் 61 விக்ரமுக்கு டேக்கா கொடுத்த ராஷ்மிகா.! அடுத்தது யாரை இணைந்துள்ளார் பார்த்தீர்களா

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக உள்ளவர் நடிகர் விக்ரம். இவர் தமிழில் பல திரைப்படங்களில் நடித்து தாகன ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் இவர் நடிப்பில் வெளியான கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய இரண்டு படங்களும் விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது இதில் கோப்ரா திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது ஆனால் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அது மட்டுமில்லாமல் பொன்னியின் செல்வன் திரைப்படம் வசூலில் புதிய சாதனை படைத்து வருகிறது இந்த நிலையில் நடிகர் விக்ரம் அவர்கள் தற்போது சியான் 61 திரைப்படத்தில் நடிக்க தொடங்கி விட்டார். இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் விக்ரம்.

இந்த படத்தை பா ரஞ்சித் அவர்கள் இயக்கி வருகிறார் இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒரு சில காட்ச்சிகள் விடுமுறைக்குப் பிறகு திரும்பவும் சீயான் 61 திரைப்படத்தின் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சீயான் 61 திரைப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக பிரபல தெலுங்கு முன்னோடி நடிகையான ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளிவந்த நிலையில் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தன்னா நடிக்கவில்லை என்று தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

அப்போ வேற யாரு நடிக்கிறார் என்றால் நடிகை மாளவிகா மோகன் இந்த படத்தில் நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு சியான் 61 படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என குறிப்பிடுகிறது.மேலும் இந்த படத்தின் அதிகாரப்பூர் அறிவிப்பை விரைவில் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment