காதலன் கண்முன்னே காதலியை நாசம் செய்த 3 இளம் வாலிபர்.! செல்போனில் படம் எடுத்து மிரட்டல்

0

சமீபகாலமாக சினிமா பட பாணியில் குற்றங்கள் நடைபெற்று வருவதை நாம் அடிக்கடி செய்திகளை பார்த்து வருகிறோம். அந்த வகையில் கடலூரிலும் சினிமா பட பாணியில் காதலன் கண்முன்னே காதலியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இந்த நிலையில் காதலன் உட்பட 4 பேரையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடலூர் தலைமை தபால் நிலையம் பகுதியில் நல்லிரவு இருபத்தி ஒரு வயதுடைய பெண் ஒருவர் பேருந்து நிறுத்தத்தில் தன்னந்தனியாக நின்று கொண்டிருந்தார் அப்போது ரோந்து பணிக்காக சென்ற காவல்துறை கண்காணிப்பாளர்கள் அங்கே தனியாக நின்று கொண்டிருந்த பெண்ணிடம் சந்தேகத்தின் பெயரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள் அப்பொழுது அந்தப் பெண் கூறிய தகவலை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

அந்தப் பெண் கூறியதாவது கடலூர் கம்மியம்பேட்டை பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டில் இளம்பெண் தன்னுடைய காதலனுடன் பேசிக் கொண்டு இருந்துள்ளார் அப்போது அந்த வழியாக வந்த 3 வாலிபர்கள் இருவரையும் ஒன்றாக போட்டோ எடுத்துக்கொண்டு மிரட்டியுள்ளார். அதுமட்டுமில்லாமல் இளம்பெண்ணின் காதலனை இரு வாலிபர்கள் பிடித்துக்கொண்டு இளம்பெண்ணை ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார்.

அது மட்டுமில்லாமல் அதனை செல்போன் மூலம் படமும் எடுத்துள்ளார்கள் இந்த நிலையில் அவர்களிடம் இருந்து செல்போனை பறித்து கொண்டு நடந்ததை யாரிடமாவது கூறினால் அவ்வளவுதான் என மிரட்டி அனுப்பியதாக போலீசாரிடம் அந்தப்பெண் கண்ணீருடன் அழுதுகொண்டே கூறியுள்ளார். உடனே போலீசார் அந்த பெண்ணை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்கள் பின்பு பெண்ணின் காதலனை பிடித்து விசாரணையில் ஈடுபட்டார்கள் போலீசார்.

அப்பொழுது காதலன் அந்த மூன்று நபர்கள் யார் என்றே தெரியாது எனக் கூறினார், அதிகாலையில் சந்தேகப்படும்படி மூன்று நபர்கள் போவதை அறிந்த போலீசார் அவர்களை அழைத்து விசாரணை நடத்தினார்கள் இந்த விசாரணையில் அந்த 3 வாலிபர்கள் போலீசார் பிடித்து பெண்ணின் காதலன் முன்னே நிறுத்தினார்கள் அப்பொழுது இவர்கள்தான் அந்த தவறை செய்தது என பெண்ணின் காதலன் வாலிபர் கூறினார்.

விசாரணையில் அவர்கள் கடலூர் குப்பன்குளத்தை சேர்ந்த கிஷோர் (வயது 19), சதீஷ் (19), கடலூர் புதுபாளையத்தை சேர்ந்த ஆரீப் என தெரியவந்தது  இவர்களில் ஒருவர்தான் அந்த பெண்ணை காதலன் கண்முன் பாலியல் கொடுமை  செய்தார். இதனை வெளியே தெரிவித்தால் காதலன், காதலி சேர்ந்து இருக்கும் போட்டோக்களை வெளியிடுவோம் என்று மிரட்டி சென்றிருப்பது தெரியவந்தது.

அதன்பிறகு 3 வாலிபர்களையும் போலீசார் பிடித்து விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள் காதலனிடம் இருந்த பரித்த செல்போன் வீட்டில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதன் மூலம் காதலனின் செல்போன் மற்றும் மூன்று நபர்களின் செல்போனை போலீசார் தீவிரமாக சோதனை நடத்தி அதன் பிறகு மூன்று போரையும் சிறையில் அடைத்தார்கள்.