6 பாலில் 7 சிக்சர் அடித்து உலக சாதனை படைத்த CSK இளம் வீரர்.!

0
csk-player
csk-player

இந்திய அணியின் வீரரான ருதுராஜ் கெய்க்வாட் இவர் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ரஞ்சித் ட்ராபி முதல் தரப்போட்டியில் தான் அறிமுகமானார். அதன் பிறகு 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் போட்டிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ருதுராஜ் கெய்க்வாட்டை ஏலத்தில் எடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 2019 இல் அவர் இந்திய ஏ அணியில் களமிறங்கி இலங்கைக்கு எதிரான ஒரு போட்டியில் 187 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

அதன் பிறகு 2019 to 2020 ஆண்டுக்கான தியோதர் ட்ராபிக்காக இந்திய பி அணியில் இடம் பிடித்தார். இப்படி தனது முழு திறமையை வெளிக்காட்டி வரும்ருதுராஜ் கெய்க்வாட் இன்று நடைபெற்று முடிந்த 50 ஓவர் போட்டிகளில் ஒரு ஓவருக்கு ஏழு சிக்ஸர்கள் அடித்து 43 ரன்கள் குறித்து உலக சாதனை படைத்திருக்கிறார்.

விஜய் சேசரா 2022 கோப்பைகாண கால் இறுதி போட்டி இன்று நடைபெற்று வந்தது இதில் மகாராஷ்டிரா மற்றும் உத்தரபிரதேச அணிகள் இன்று மோதிக்கொண்டனர். இந்த போட்டியில் தான் ருதுராஜ் கெய்க்வாட் ஒரு ஓவரில் ஏழு சிக்ஸர்கள் அடித்து உலக சாதனை படைத்துள்ளார். மேலும் ருதுராஜ் கெய்க்வாட் ஐபிஎல் இல் சிஎஸ்கே அணியில் விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ருதுராஜ் கெய்க்வாட் இந்த போட்டிகளில் 16 சிக்சர்கள் மற்றும் 10 போர்கள் அடித்துள்ளார் அது மட்டுமல்லாமல் 159 பந்துகளில் 220 ரன்கள் குவித்துள்ளார். இவருடைய உதவியுடன் மகாராஷ்டிரா அணி இன்று நடந்த போட்டியில் 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 330 ரன்கள் குவித்து உள்ளது.

சிவா சிங் வீசிய 49 வது ஓவரில் ருதுராஜ் கெய்க்வாட் நோபால் உட்பட அனைத்து பந்துகளையும் சிக்ஸரில் விலாசினார். அந்த ஒரு ஓவரில் மட்டும் ருதுராஜ் கெய்க்வாட் 43 ரன்கள் அடித்துள்ளார். இதனால் 50 கிரிக்கெட் போட்டிகளில் தனிநபர் ஒரு ஓவரில் அதிக சிக்ஸர்கள் அடித்த  சாதனையை ருதுராஜ் கெய்க்வாட் நிகழ்த்தியுள்ளார்.