13 வருடங்களுக்குப் பிறகு மும்பையை சொந்த மண்ணில் பழி தீர்த்துக் கொண்ட சிஎஸ்கே அணி.!

0
dhoni
dhoni

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் நேருக்கு நேராக மோதிக் கொண்டது இந்த போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது முதலில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பவுலிங் தேர்வு செய்தது. இதனால் மும்பை அணி பேட்டிங் செய்தது .தொடக்க வீரரான இஷான் கிஷன், கேமரூன் கிரீன் களம் இறங்கினார்கள் இவர்கள் துஷார் தேஷ்பாண்டே வீசிய இரண்டாவது ஓவரில் கேமரூன் விக்கெட்டை பறி கொடுத்தார் இவர் விக்கெட் ஆகும் பொழுது வெறும் ஆறு ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார்.

இதனை அடுத்து தீபக் வீசிய முனாவது ஓவரில் இஷான் கிஷன் வெறும் 7 ரன்களில் ஆட்டம் இழந்தார் அடுத்ததாக இறங்கிய ரோகித் சர்மா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்ததால் மும்பை இந்தியன்ஸ் அணி வெறும் 14 ரன்களுக்கு தங்களுடைய மூன்று மெயின் விக்கெட் களை இழந்து விட்டது. அதன் பிறகு வந்த வதரா சூரியகுமார் யாதவ் இணைந்து பவர் பிளே ஓவர் முடிவில் 34 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்கள்.

அதன் பிறகு சூரியகுமார் யாதவ் ஒவ்வொரு ஓவருக்கும் பவுண்டரி விலாச தொடங்கினார். சூரிய குமாரை அட்டாக் செய்ய ஜடேஜா பந்து வீசினார் அப்பொழுது 26 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதனைத் தொடர்ந்து இளம் வீரரான நேஹால் 46 பந்துகளில் அரை சதத்தை விளாசினார் இதனைத் தொடர்ந்து 17வது ஓவரில் மும்பை இந்தியன்ஸ் அணி 17 ரன்களை எடுத்தது இதனால் மும்பை அணி சவாலான இலக்கை எட்டு என  எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பதிரனா பந்துவீச்சில் நேஹல் 64 ரன்கள் ஆட்டம் இழந்தார்.

இதனைத் தொடர்ந்து 20 வது ஓவரில் மும்பை இந்தியன்ஸ் அணி 139 ரன்கள் எட்டு விக்கெட் இழப்பிற்கு எடுத்திருந்தது 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என இறங்கிய சிஎஸ்கே அணி ருத்ராஜ் 16 பாலில் 30 ரன்கள் விலாசினார் இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 46 ரன்கள் சேர்த்தார்கள் கான்வே ஒரு புறம் நின்று விளையாட ஆரம்பித்ததால் ரகானே 21 ரன்களிலும் ராயுடு 12 ரன்கள் ஆட்டமிழக்க கான்வே 44 ரன்களில் வெளியேற இறுதியில் சிவன் துபே 26 ரன்கள் எடுத்து வெற்றிக்கணியை ருசித்தார் .

இதனால் சென்னை அணி 17.4 ஓவரில் நான்கு விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கை மிக எளிதாக எட்டியது இதனால் சிஎஸ்கே அணி 11 போட்டிகளில் விளையாடி 13 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது மும்பை 10 புள்ளிகள் உடன் ஆறாவது இடத்தில் தற்போது இருக்கிறது. 13 வருடங்களுக்குப் பிறகு சேப்பாக்கம் மைதானத்தில் மும்பை அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீழ்த்தியுள்ளது.