ரொம்ப நாளா இதுக்கு தான் காத்திருந்தேன்.. மும்பையை ஓட ஓட விரட்டிய ரஹானே.. வெறும் 19 பந்தில் ருத்ர தாண்டவம்…

மும்பையை ஓட ஓட கதறவிட்ட ரகானே 19 பந்தில் அரை சதம் அடித்தது எப்படி..

சென்னை மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி நேற்று நேருக்கு நேராக மோதிக்கொண்டன இதில் சீனியர் வீரரான ரகானே 19 பந்தில் அரை சதம் அடித்து அணிக்கு மாபெரும் வெற்றியை மிகவும் எளிதாக அடைய வழி வகுத்துள்ளார்.

பதினாறாவது ஐபிஎல் தொடரில் 12-வது லீக் போட்டியில் தல தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் நேற்று மோதிக்கொண்டன இந்த போட்டியில் முதலில் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்தது இந்த போட்டி மும்பையில் உள்ள வான்காட மைதானத்தில் நடைபெற்று வந்தது டாஸ் வின் பண்ணிய சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தார்கள்.

அதனால் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்தது முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் எட்டு விக்கெட் களை இழப்பிற்கு மொத்தமாக 157 மட்டுமே எடுத்திருந்தது. இதில் இஷான் கிஷான் 32 ரண்களும் டேவிட் 31 ரண்களும்  கொடுத்தார்கள். 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கினார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இதில் டிவான் கான்வே டக் அவுட் ஆகி ஏமாற்றத்தை கொடுத்தார் அதன் பின் களத்திற்கு வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அறிமுக வீரரான ரஹானே முதல் பந்தில் இருந்து மும்பை இந்தியன் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தார்.

ஒவ்வொரு பாலையும் பறக்க விட்டு வெறும் 19 பந்துகளில் அரை சதம் அடித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு வழியை காட்டினார் இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக அதிவேகமாக அரை சதம் அடித்த வீரர்களில் மூன்றாவது வீரராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மிகக் குறைந்த பந்துகளில் அரை சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தையும்  தக்க வைத்துக் கொண்டார்.

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா மூன்று விக்கெட் களை கைப்பற்றினார். அது மட்டும் இல்லாமல் சாட்நர் மற்றும் துஷார் தேஷ் பாண்டே ஆகியர்கள் தல ரெண்டு விக்கெட்களை கைப்பற்றினார்கள். இந்த நிலையில் மிக எளிதாக வெற்றியை csk அணி வெற்றிபெற்றது.

Leave a Comment