சிஎஸ்கே அஸ்திவாரத்தையே ஆட்டிப் பார்க்கும் DC..! தம்பி அவரு போனா என்ன நான் இருக்கேன் பொளந்து கட்டும் csk வீரர்..

0
csk
csk

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் ஆனது தற்பொழுது பிளே ஆப் சுற்றினை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது இந்த நிலையில் இன்று இரவு தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிடல் அணியும் மோத இருக்கிறது இன்று நடைபெறும் 55 வது லீக் ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஐபிஎல் தொடரில் புள்ளி பட்டியலில் 13 பட்டியல்களுடன் இரண்டாவது இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் 8 புள்ளிகள் உடன் கடைசி இடத்தில் இருக்கும் டெல்லி அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதிக் கொள்கின்றன  .இதில் முதலில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது .

இந்த போட்டியில் வெற்றி பெற்றால் கிட்டத்தட்ட சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு வாய்ப்பினை தட்டிக் கொள்ளும் அதேபோல் டெல்லி அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றால் புள்ளி பட்டியலில் முன்னேற்றத்தை காணும் அதனால் இரண்டு பேருக்குமே மிக முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது.

முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி ருத்ராஜ் மற்றும் கான்வே இருவரும் தொடக்க வீரர்களாக இறங்கினார்கள் நாலாவது ஓவரில் கான்வே பட்டேல் ஓவரில் தனது விக்கெட்டை இழந்தார் இவர் வெறும் 13 பாலுக்கு 10 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த இவர் அவுட்டானது பலருக்கு சோகத்தை ஏற்படுத்தியது.

ஆனால் அவர் போனால் என்ன நான் இருக்கேன் என ருத்ராஜ் போலந்து கட்டுகிறார் வெறும் 18 பாலில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் விளையாடுகிறார் அதே போல் ரகானே ஆறுபாலில் 10 ரன்கள் எடுத்துள்ளார்.. 6 ஓவர் முடிவில் சிஎஸ்கே அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 48 ரன்கள் எடுத்திருந்தது.