கடைசி நேரத்தில் சம்பவம் செய்த தோனி.! பவுலிங் ஈடுகட்ட முடியாமல் பொலபொலன்னு சரிந்த சிஎஸ்கே வீரர்கள்.!

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரானது தற்பொழுது பிளே ஆப் சுற்றினை நோக்கி பயணித்து வருகிறது இந்த நிலையில் இன்று இரவு 55 வது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிடல் அணியும் மோதியது.

இதில் முதலில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்தது இந்த இரு அணிகளுக்கும் மிக முக்கியமான போட்டியாகும் ஏனென்றால் சிஎஸ்கே அணி 13 புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்திலும் டெல்லி கேப்பிடல் அணி 8 புள்ளிகள் உடன் கடைசி இடத்தில் இருக்கிறது அதனால் சென்னை அணி இதில் வெற்றி பெற்றால் பிலே ஆப் சுற்றிற்கான வாய்ப்பினை தக்க வைத்துக் கொள்ளும் அதே போல் டெல்லி அணி வெற்றி பெற்றால் புள்ளி பட்டியலில் முன்னேற்றத்தை காணும் அதனால் இருவருக்கும் மிக முக்கிய பகுதியாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களான ருத்ராஜ் கான்வே இறங்கினார்கள் இதில் ருத்திராஜ் 18 பந்துகளில் 24 ரன்களும் கான்வே 13 பாலில் 10 ரன்கலும் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். அதன் பிறகு ரகானே 20 பாலில் 21 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

அடுத்ததாக களம் இறங்கிய மொயின் அலி 12 பாலில் ஏழு ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அதேபோல் சிவன் துபே 12 பாலில் 25 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார் ராய்டு 17 பாலில் 23 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார் ஜடேஜா 16 பாலில் 21 ரன்களும் தோனி 9 பாலில் 20 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் விக்கெட் இழப்பிற்கு 31 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது அதன் பிறகு இரண்டாவது விக்கட்டில் 49 ரன்கள் எடுத்திருந்தது மூன்றாவது விக்கெட் இழப்புக்கு  64 ரன்களும் ஆறாவது விக்கெட்டில் 126 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஏழாவது விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்திருந்தார்கள் இந்த நிலையில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எடுத்துள்ளது.

தோனி கடைசி நேரத்தில் இரண்டு சிக்ஸ் மற்றும் ஒரு போர் அடித்து சிஎஸ்கே அணியின் ரண்களை அதிகப்படுத்தினார். இதில் டெல்லி கேப்பிடல் அணியில் அகமத் ஒரு விக்கெட்டையும் யாதவ் ஒரு விக்கெட்டையும், பட்டேல் 2 விக்கெட் குல்திப் யாதவ் ஒரு விக்கெட், மிர்ச்சல் மார்ச் மூன்று விக்கெட்டுகளையும் எடுத்திருந்தார்கள். இந்த நிலையில் 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிடல் அணி களம் இறங்கியுள்ளது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment