ஏற்கனவே செம கடுப்பில் இருக்கிறோம் இதுல இது வேறயா சிஎஸ்கே-வின் ட்விடர் பதிவை வச்சு செய்யும் ரசிகர்கள்.!

0

ஐபிஎல் போட்டி மிகவும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது இந்த ஐபிஎல் போட்டியில் சென்னை அணி மட்டும் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது, அதனால் சிஎஸ்கே ரசிகர்கள் மிகவும் கவலையுடன் இருக்கிறார்கள்.

அது மட்டும் இல்லாமல் கடந்த ஐபிஎல் போட்டியில் தோனி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்றும் அதனால்தான் ஒவ்வொரு ஆட்டமும் தோல்வியை தழுவி வருகிறது எனவும் ரசிகர்கள் முதல் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் வரை தோனியை விமர்சனம் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதிக்கொண்டது இந்த போட்டியிலும் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது தொடக்கத்தில் சென்னை அணியின் முக்கியமான விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில் மிடில் ஆர்டர் விளையாட வந்த தோனி மற்றும் ஜாதவ் ஆகியோர்கள் அதிரடியாக ஆடி ரன்களை சேர்க்கவில்லை.

அதனால்தான் சென்னை அணி இந்த ஆட்டத்தில் மிகப்பெரிய ரன்களை குவிக்க முடியாமல் தடுமாறியது, இதை பார்த்த சென்னை அணி ரசிகர்கள் டெஸ்ட் விளையாட்டு போல் விளையாடுகிறார்கள் என கூறி வந்தார்கள், மேலும் தோனியின் ஆட்டம் டெஸ்ட் விளையாட்டு போல் தான் இருப்பதாகவும் தோனியை விமர்சனம் செய்தார்கள்.

இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தது அதை பார்த்த ரசிகர்கள் இன்னும் கோபம் அடைந்துள்ளார்கள் அந்த ட்விட்டர் பதிவில் test-ing times என பதிவிட்டு இருந்தது அந்தப் பதிவில் கூறியதாவது சோதனைக்காலம் என்பதை குறிப்பிட்டு அதில் டெஸ்ட் இன்னிங்சில் விளையாடியதாகவும் மறைமுகமாக அதில் குறிப்பிட்டுள்ளார்கள்.

இதைப்பார்த்த ரசிகர்கள் கமெண்ட்களை பறக்க விட்டு வருகிறார்கள்.