சிஎஸ்கே அணியின் துணை கேப்டன் இனி இவர்தான், ரெய்னா கிடையாது.! இதோ அதிரடி அறிவிப்பு

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது ஐபிஎல் சீசன் தான், இந்த வருடம் 13வது ஐபிஎல் சீசன் அடுத்த மாதம் 29 ஆம் தேதி தொடங்க இருக்கிறது, இந்த வருடத்திற்கான போட்டி அட்டவணை பட்டியல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் கொண்டாடினார்கள், அதேபோல் அணியின் ஏலம் முடிவடைந்த நிலையில் சென்னை சிஎஸ்கே அணி வீரர்கள் பயிற்சி எடுத்து வருகிறார்கள்.

அதிலும் குறிப்பாக சென்னை அணி வீரர்களான ரெய்னா மற்றும் அம்பத்தி ராயுடு ஆகியோர்கள் இந்த மாதம் துவக்கத்திலிருந்தே பயிற்சியை தொடங்கி விட்டார்கள், இந்த நிலையில் அடுத்த கட்ட பயிற்சியாக மார்ச் 1ம் தேதி முதல் இரு வாரங்கள் பயிற்சி நடைபெற இருக்கிறது, இதில் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனியும் கலந்துகொள்ள இருக்கிறார்.

இந்த நிலையில் இந்த ஐபிஎல் தொடர் பற்றி சமீபத்தில் பேட்டி ஒன்றை கொடுத்தார் சுரேஷ் ரெய்னா அவர் கூறுகையில், சென்ற முறை தோனி விளையாட முடியாத நிலையில் சென்னை அணிக்கு கேப்டனாக நான் செயல்பட்டேன் ஆனால் அந்த போட்டிகளில் கேப்டனாக சிறப்பாக என்னால் செயல்பட முடியவில்லை அதனால் இந்த முறை நான் துணை கேப்டனாக செயல் பட போவதில்லை அதற்கு பதிலாக முன்னணி அதிரடி வீரரான ஷேன் வாட்சன் சென்னை அணியின் துணை கேப்டனாக செயல்பட இருக்கிறார்.

ஷேன் வாட்சன் ஆஸ்திரேலிய அணியை பல வருடங்களாக வழிநடத்தியவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான், அது மட்டுமில்லாமல் பல ஆண்டுகள் கேப்டன்சி செய்த அனுபவம் கொண்டவர், இவர்களின் இந்த ஐடியா நிச்சயம் சென்னை அணிக்கு கைகொடுக்கும் என தெரிகிறது மேலும் சிறப்பாக விளையாடுவார் என்று ரெய்னா கூறியது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment