விசில் போடு இப்பவே ஆட்டத்தை ஆரம்பித்ததல தோனி… சி எஸ் கே அணி வெளியிட்ட மாஸ் வீடியோ…

கிரிக்கெட் உலகத்தின் தல என அன்போடு அழைக்கப்படுபவர் தோனி இவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக பணியாற்றியவர். அடக்கமான அன்பான ஆக்ரோஷமான கேப்டன் என்று பல பெயர்களில் இவரை அழைப்பார்கள். ஒரு சிலர் கூல் கேப்டன் எனவும் அழைப்பார்கள். அந்த அளவு தல தோனியின் புகழ் உச்சத்தில் இருந்து வருகிறது அதேபோல் சிஎஸ்கே அணியில் தல தோனி விளையாடி வருகிறார்.

இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டி வருகின்ற மார்ச் 31ஆம் தேதி கோலாகலமாக தொடங்க இருக்கிறது இந்த நிலையில் தற்பொழுது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலத்த பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறது இதுவரை நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதன் முறையாக குஜராத் அணியுடன் மோத இருக்கிறது இந்தப் போட்டி மிகவும் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தோனி இசையமைப்பாளராக மாறி கிட்டார் இசைக்கும் வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன்னுடைய அதிகாரபூர்வ twitter பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் தோனி, ருத்ராஜ், தீபக் சகார்,  என பல வீரர்கள் சென்னை சிஎஸ்கே அணியில் விளையாடி வருகிறார்கள்.

பயிற்சி இல்லாத நேரத்தில் ஓய்வு நேரத்தில் மிகவும் ஜாலியாக இருக்கும் வீடியோக்களை சிஎஸ்கே அணி தங்களுடைய அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறது இந்த வீடியோவில் தோனி கிட்டார் வாசித்துக் கொண்டு ஆடுகிறார் அது மட்டும் இல்லாமல் இந்த இசைக்கு ஏற்றது போல் சிஎஸ்கே வீரர்கள் டான்ஸ் ஆடிக்கொண்டு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் தோனி இன்னும் இளமையாக இருக்கிறார் அதனால் இந்த போட்டியில் கண்டிப்பாக தோனியின் ஆட்டம் ஆக்ரோஷமாக இருக்கும் பேட்டிங்கில் அசத்துவார் எனவும் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Comment