2026 ஐபிஎல் சீசன் தற்பொழுது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது அதேபோல் டிசம்பர் 16ஆம் தேதி அடுத்த மாதம் மினி ஏலம் நடக்க இருக்கிறது. அதற்காக முன்னதாக தக்க வைத்த வீரர்கள் மற்றும் விடுவிக்க கூடிய வீரர்களை அந்தந்த அணி பட்டியலிட்டு இன்று மாலை வெளியிட்டது.
அப்படி இருக்கும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்னாள் கேப்டனான தோனியை நான்கு கோடிக்கு அணியில் தக்க வைத்துள்ளது இந்த நிலையில் 2026 ஐபிஎல் இல் தோனி விளையாடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது சிஎஸ்கே அணி.
அதுமட்டுமில்லாமல் 2026 இல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருதுராஜ் நியமிக்கப்பட்டுள்ளார் இதனை சிஎஸ்கே அணி அதிகாரபூர்வமாக போஸ்டர் மூலம் வெளியிட்டுள்ளது. என்னாதான் ருதுராஜ் கேப்டனாக இருந்தாலும் தோனி சொல்லே வேதவாக்காக இருக்கும் என ரசிகர்கள் கூறுகிறார்கள்.

