விஜய்யின் மாஸ்டர் படத்தைப் பார்த்து புகழ்ந்து தள்ளும் சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர்.? கடைசியில் நடிகர் விஜய் பற்றி என்ன சொன்னார் தெரியுமா.?

0

தமிழ் திரை உலகில் தொடர்ந்து சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுப்பதால் ரஜினிக்கு பிறகு சிறப்பான இடத்தை தன்வசப்படுத்தி உள்ளார் தளபதி விஜய். இவர் மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இளம் இயக்குனரான நெல்சன் திலிப்குமார் உடன் கூட்டணி அமைத்து பீஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. மேலும் விஜய் பற்றிய செய்திகளும் சமூக வலைதள பக்கங்களில் அடிக்கடி உலாவருகின்றன இப்படி இருக்க தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர ஆட்டக்காராரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா.

விஜய் குறித்து ஒரு சுவாரஸ்யமான தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்தார் அவர் கூறியது. தமிழில் மாஸ்டர் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது அந்த திரைப்படத்தை ஹிந்தியில் டப் செய்து டிவியில் வெளியானது அதை அண்மையில் சுரேஷ் ரெய்னாவும் அவரது மகளும் பார்த்து கண்டுகளித்தனர்.

பின் அவர் விஜயின் நடிப்பு மாஸ்டர் திரைப்படத்தில் மிக அற்புதமாக இருந்தது என கூறினார். இந்த செய்தியை தற்போது கிரிக்கெட் ரசிகர்களும் மற்றும் தளபதி ரசிகர்களும் சமூக வலைதளப் பக்கத்தில் ஷேர் செய்து மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகின்றனர்.