தமிழர்களை பெருமைப்படுத்தும் விதமாக வெள்ளை வேட்டியுடன் அரபி குத்துப்பாடலுக்கு நடனமாடிய CSK வீரர்கள்.! வைரலாகும் வீடியோ.

தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக நெல்சன் திலிப்குமர் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தை சன் பிக்சர் நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது அதுமட்டுமில்லாமல் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

மேலும் படத்திற்கு அனிருத் தான் இசையமைத்து இருந்தார் இந்த திரைப்படம் கடந்த ஏப்ரல் 13ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகியது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாகிய இந்த திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

மேலும் பீஸ்ட் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள அரபி குத்து பாடல் மிகப்பெரிய வைரலானது இந்தப் பாடல் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆகி மொழி கடந்து மிகப்பெரிய ஹிட்டடித்தது இந்த பாடலுக்கு நடிகர்கள் நடிகைகள், சினிமா ரசிகர்கள் என பலரும் நடனமாடி வீடியோக்களை வெளியிட்டார்கள் அதுமட்டுமில்லாமல் மொழி தெரியாதவர்கள் கூட இந்த பாடலுக்கு நடனமாடிய வீடியோ எடுத்து வெளியிட்டார்கள்.

அதேபோல் பீஸ்ட் திரைப்படத்தில் பூஜா ஹெக்டே மற்றும் விஜய் இணைந்து ஆடி உள்ள அரபி குத்து பாடல் பலரையும் கவர்ந்து இழுத்துள்ளது அந்த வகையில் தற்பொழுது ரசிகர்கள் அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக ஒரு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அதாவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த வீரர்கள் தமிழர்களைப் பெருமைப்படுத்தும் விதமாக வெள்ளை வேட்டியுடன் அரபி குத்துப்பாடலுக்கு நடனம் ஆடி வீடியோவை வெளியிட்டுள்ளார்கள் இந்த வீடியோ தற்போது விஜய் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ.

https://youtube.com/shorts/Q0dRQnPFLYA

Leave a Comment

Exit mobile version