நீங்கள் விளையாடி தோற்றதால் பழியை தூக்கி அவர்கள் மீது போடுவதா.!! தோனி மீது செம கடுப்பில் ரசிகர்கள்.! என்ன இப்படி சொல்லிட்டார்.

0

இந்த வருட ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மிகவும் மோசமான விளையாட்டை வெளிப்படுத்தி வந்தது. அதன் பிரதிபலிப்பு தான் 9 போட்டிகளில் மூன்று போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது, மீதமிருக்கும் ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் நிலைமை ஏற்பட்டது சென்னை அணிக்கு.

இந்த நிலையில் நேற்றைய போட்டியில் சென்னை அணி முதல் முக்கிய விக்கெட்டுகளை இழந்து வெறும் 125 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது, பின்னர் ஆடிய ராஜஸ்தான் அணி தொடக்கத்தில் விக்கெட்டை இழந்தாலும் ஜோஸ் பட்லர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் தங்களுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றியடைய செய்தார்கள்.

அதனால் ராஜஸ்தான் அணி 18 ஓவர்களில் தங்களது வெற்றிக்கனியை ருசித்தார்கள் அதனால் ராஜஸ்தான் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது ஆனால் சென்னை அணி மட்டும் பிளே ஆப் தகுதியை இழந்துள்ளது.

இந்த நிலையில் தோல்விக்குப் பிறகு பேட்டியளித்த தோனி கூறிய விஷயம் தான் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது, டோனி அந்தப் பேட்டியில் பேசியதாவது நாங்கள் சில திட்டங்களை போட்டுதான் விளையாடினோம் ஆனால் அது சரியாக வேலை செய்யவில்லை என்றே தோன்றுகிறது. அணியில் உள்ள இளம் வீரர்கள் பெரிதாக ஒரு வேகம் காட்டவில்லை அதனால் தான் அவர்களுக்கு இதுவரை வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.

ஆனால் இன்றைய போட்டியின் முடிவு மீதமுள்ள போட்டிகளில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும்படி அமைந்துள்ளது. அந்தப் போட்டிகளில் எந்தவித நெருக்கடியும் அவர்கள் ஆடலாம் தல தோனி கூறியுள்ளார், தோனியின் இந்த பேச்சு பல கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது ஏனென்றால் அணியில் உள்ள இளம் வீரர்கள் வேகத்தை காட்டவில்லை என கூறுவது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஏனென்றால் ஜாதவ்  தொடர்ந்து சிறப்பாக விளையாடாத நிலையில் அவருக்கு பதிலாக இளம் வீரர் ஜெகதீசன் அணியில் சேர்க்கப்பட்டார், அவருக்கு கிடைத்த ஒரே ஒரு வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி அந்த போட்டியில் சிறப்பாக ஆடினார் ஆனால் அடுத்தடுத்த போட்டியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை மீண்டும் அடுத்த இரண்டு போட்டிகளுக்கு பிறகு ஜாதவிற்க்கே வாய்ப்பு கிடைத்தது.

அப்படி இருக்கும் வகையில் இந்தப் போட்டியிலும் கடைசியாக இறங்கிய ஜாதவ் 7 பந்துகளுக்கு 4 ரன்கள் மட்டுமே எடுத்தார், இப்படி இருக்கும் நிலையில் ஜெகதீசன் போன்ற இளம் வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் அளிக்காமல் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி இழந்து நிற்கும் நிலையில் இளம் வீரர்களிடம் வேகத்தை காணவில்லை எனக் கூறுவது சற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.