பலநாள் வெறியைத் தீர்த்துக் கொண்ட தல தோனி 5 பந்தும் சிக்ஸர் தான்.! வைரலாகும் மாஸ் வீடியோ.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான மகேந்திர சிங் தோனி கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கு பிறகு எந்த ஒரு போட்டியிலும் விளையாடவில்லை, இதுவரை கிட்டத்தட்ட அவர் விளையாடி 7 மாதங்கள் ஆகிவிட்டன.

தல தோனி தொடர்ந்து ஏழு மாதங்களாக விளையாடாமல் இருப்பதால் இந்திய வீரர்களின் ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது, அதனால் இந்திய அணியில் மீண்டும் தோனி திரும்புவது கொஞ்சம் சிரமமான ஒன்று, இருந்தாலும் ரசிகர்கள் துணியை தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறார்கள்.

இந்த நிலையில் இந்த மாதம் ஐபிஎல் தொடங்க இருக்கிறது, இதில் மீண்டும் சிஎஸ்கே அணி கேப்டனாக களமிறங்குகிறார் தோனி, இந்த மாதம் 29 ஆம் தேதி ஐபிஎல் 13 வது சீசனில் தோனியின் ஆட்டத்தைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள், அதனால் தோனி தீவிர பயிற்சி எடுத்து வருகிறார்.

தோனி பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் பொழுது வெளியாகும் செய்திகள் அனைத்தும் இணையதளங்களில் படும் வேகமாக வைரலாகி வருகிறது, முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை அணியும் மோதுகின்றன, இதற்காக தல தோனி வலைப் பயிற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார் அப்பொழுது வலைப் பயிற்சியில் தொடர்ந்து 5 பந்துகளில் 5 சிக்ஸர்களை பறக்க விட்டுள்ளார்.

தோனி இந்த ஐபிஎல்லில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என  ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Leave a Comment