களமிறங்கிய தல தோனி .!வைரலாகும் சிஎஸ்கே வீடியோ!!

2008 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை இந்தியாவில் ஆண்டுதோறும் ஐபிஎல் T20 கிரிக்கெட் நம்மை மகிழ்வித்து கொண்டு வருகிறது.முன்னணி நட்சத்திர வீரர்களான தோனி, ரோஹித் சர்மா, விராட்  மற்றும் ராகுல்  பல முன்னணி வீரர்கள் எதிர் எதிர் அணிக்காக விளையாடும் பொழுது ஆட்டத்தில் அனல் பார்க்கும் என்பதில் சற்றும் சந்தேகமில்லை. ஐபிஎல் T 20 கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறது.

இப்பொழுது 2020ஆம் ஆண்டு 13வது சீசன் மார்ச் 29 அன்று ஐபிஎல் T20 தொடங்க உள்ளது. இந்த போட்டியில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்க உள்ளன. மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்ச் பெங்களூர், டெல்லி கேப்பிடல், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் ஆகிய அணிகள் பங்கேற்க உள்ளன. இந்த நிலையில் முன்னணி அணிகள் தனது வீரர்களை வலைப்பயிற்சியில் ஈடுபடுத்தி வருகிறார்கள்.   இந்த நிலையில் சென்னை கிங்ஸ் அணி வீரர்களும் சேப்பாக்கம் மைதானத்தில் வலை பயிற்சி எடுத்து வருகின்றனர்.

சென்னை அணியின் கேப்டன் மற்றும் நச்சத்திர வீரரான மகேந்திர சிங் தோனி அவர்கள் உலக கோப்பைக்கு பின் எந்த ஒரு சர்வதேச கிரிக்கெட் விளையாட நிலையில் தற்போது அவர் சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட உள்ளார். இதனை அவரது வரவேற்று உள்ளனர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்  ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வலைப் பயிற்சி எடுத்தார் இவருடன் மற்ற சக வீரர்களும் பயிற்சி எடுத்தார்கள்  என்பது குறிப்பிடத்தக்கது இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வெளியாகி சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களை சந்தோஷ படுத்தி வருகிறது.

Leave a Comment