நடிகர் அஜித் திருமணத்தையும் மீறி கள்ளத்தொடர்பில் இருப்பதாக கூறிய பிரபலம்.! அதிர்ச்சியில் ரசிகர்கள்..

0
ajith
ajith

நடிகர் அஜித் திருமணத்தை தாண்டி கள்ளத்தொடர்பில் இருப்பதாக பிரபலம் ஒருவர் சமீப பேட்டியில் கூறியது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வரும் நடிகர் அஜித் நடிப்பில் வெளிவரும் அனைத்து படங்களும் மிகப்பெரிய வெற்றியினை பெற்று வருகிறது. மேலும் வசூல் மன்னனாக கோடிக்கணக்கில் பாக்ஸ் ஆபிஸில் தொடர் வெற்றியை கண்டு வரும் இவர் பெரிதாக நஷ்டங்கள் ஏற்படாத வகையில் இவருடைய படங்கள் ஓடிக்கொண்டு இருக்கிறது.

அந்த வகையில் இவருடைய நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியாக விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சாதனை படைத்த நிலையில் இதனை அடுத்து மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாக இருக்கும் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு நடிகர் அஜீத் ஆரம்ப காலகட்டத்தில் நடிகை ஹீராவுடன் தொடர்பில் இருப்பதாக கிசு கிசுக்கப்பட்டது. அதன் பிறகு அமர்க்களம் படத்தில் நடித்த நடிகை ஷாலினியை நடிகர் அஜித் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் தங்களுடைய பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த 2000ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

தற்பொழுது அஜித் ஷாலினி தம்பதியினர்களுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் இருக்கின்றனர். திருமணத்திற்குப் பிறகு அஜித் பற்றிய எந்த ஒரு கிசுகிசுப்பு தகவலும் வெளியாகமல் இருந்து வரும் நிலையில் அவர் தனது வேலை உண்டு, தனது மனைவி உண்டு என பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார் என்பது நமக்கு தெரிந்த ஒன்றுதான்.

umair sandh
umair sandhu

அந்த வகையில் சமீபத்தில் அஜித் ஷாலினிவுடன் ரொமான்டிக்காக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்ய ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இப்படிப்பட்ட நிலையில் நடிகர் அஜித் பற்றி பிரபல விமர்சகரும், ஓவர் சீஸ் சென்சார் போர் உறுப்பினருமான உமர் சந்த் கூறியிருக்கும் தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது அவர் திருமணத்தை மீறிய ரகசிய கள்ளத்தொடர்பில் இருப்பதாக கூறியுள்ளார். எனவே இதனை பார்த்த ரசிகர்கள் நம்புற மாறி சொல்லுங்க என கூறியதோடு மட்டுமல்லாமல் நீங்கள் கவனம் பெற வேண்டும் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக அவதூறாக பேசுகிறீர்கள் என கூறி வருகிறார்கள்.