விதவை பெண்களை வைத்து பலான படம்.! சேலம் பியூட்டி பார்லரில் கணவன் மனைவியால் அரங்கேறிய பரபரப்பு சம்பவம்.

சேலம் தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரகுமான் அவரது மகன் லோகநாதன் மற்றும் லோகநாதனின் மனைவி ரூபா ஆகிய 3 பேரும் சேர்ந்து பெண்களை மிரட்டி விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்துள்ளார்கள். இவர்கள் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதற்காக கணவனை இழந்த பெண்களை மட்டுமே குறி வைத்துள்ளார்கள்.

கணவனை இழந்த ஒரு பெண் முதலில் லோகநாதன் வலையில் சிக்கியுள்ளார் அந்தப் பெண்ணுக்கு ஆதரவாக இருப்பதாகவும், அன்பாக பார்த்துக் கொள்வது போலவும், தேவையானவற்றை வாங்கித் தந்து அந்த பெண்ணை மடக்கி உள்ளார், பின்பு அந்த பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ள அதை வீடியோவாகவும் எடுத்துள்ளார், அந்த வீடியோ வைத்துக்கொண்டு நான் சொல்வது போல் செய்யவில்லை என்றால் வீடியோவை சமூக வலைத் தளத்தில் பதிவிட்டு விடுவோம் என மிரட்டி உள்ளார்.

இப்படி மிரட்டியே அந்த பெண்ணை விபச்சாரத்திற்கு சம்மதிக்க வைத்து விட்டார், அதேபோல் லோகநாதனின் நண்பர்களான பிரதீப் மற்றும் சிவா ஆகியோரும் அஸ்தம்பட்டி பகுதியில் கணவனை இழந்த பெண்களை மிரட்டி ஆபாசமாக படம் எடுத்துள்ளார்கள் பின்னர் அந்த படங்களை காட்டி அவர்களையும் விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயற்சி செய்துள்ளார்கள்.

மேலும் பெண்களை இவ்வளவு கீழ்த்தரமாக நடத்தும் இந்த கும்பல் வீடியோவை வெளியிட கூடாது என்றால் போலீசுக்கு செல்லக்கூடாது என மிரட்டி உள்ளார்கள் ஆனால் பாதிக்கப்பட்ட சில பெண்கள் டவுன் அல்லது மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்கள்.

இந்த புகாரின் அடிப்படையில் லோகநாதன் பிரதீப் சிவா ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளார்கள் ஆபாச படம் எடுத்த வழக்கு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு, கொலை மிரட்டல் என மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள். இந்த கேவலமான செயலை செய்ய பியூட்டி பார்லரை பயன்படுத்தியுள்ளார்கள்.

Leave a Comment