விஷ்ணு விஷாலுடன் படத்தில் நடித்த கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி – வைரல் புகைப்படம் இதோ.

சினிமா உலகில் யார் வேண்டுமானாலும் அடியெடுத்து வைக்க முடியும் அந்த வகையில் சமீப காலமாக மாடலிங் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் வெற்றி கண்டு வந்த நிலையில் இசையமைப்பாளர்களும், காமெடியன்கள் கூட தற்போது சினிமாவில் ஹீரோவாக கால்தடம் பதித்து அசத்துகின்றனர்.

இவர்கள் தான் இப்படி என்றால் கிரிக்கெட் பிரபலங்கள் கூட தற்போது தமிழ் சினிமாவில் நடித்து அசத்தி வருகின்றனர். அந்த வகையில் சடகோபன் ரமேஷ்ஷை தொடர்ந்து ஹர்பஜன் சிங்கும் ஃப்ரெண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் நடித்து அசத்தினார். மேலும் விக்ரமின் கோப்ரா திரைப்படத்திலும் கூட ர்ஃபன் பதான்  தான் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களை தொடர்ந்து சினிமாவிலும் தற்போது நிஜ கிரிக்கெட்டிலும் அசத்தி வருபவர் வருண் சக்கரவர்த்தி இவர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ஜீவா படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அதன் புகைப்படங்கள் கூட தற்போது இணைய தள பக்கத்தில் கசிந்து தீயாய் பரவி வருகிறது.

ஐபிஎல்லில் அறிமுகமாகி பின் படிப்படியாக இந்திய அணியில் தற்போது இடம்பிடித்து வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருப்பவர் வருன் சக்ரவர்த்தி இவர் இதற்கு முன்பாக இந்திய அணியில் இடம் பெற அதிக பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார் ஆவார் .

அப்பொழுது இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டது. அதிலும் கலந்துகொண்டு அசத்தியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது. நீங்களே பாருங்கள் இவர் சூரி மற்றும் நடிகர் விஷ்ணு விஷால் உடன் இருக்கும் புகைப்படம் இதோ.

jeeva movie
jeeva movie

Leave a Comment