மின்னல் வேகத்தில் பந்துவீசும் பும்ரவை சுற்றி வளைத்து போட்ட தொகுப்பாளினி.? திருமணம் எப்பொழுது தெரியுமா.?

பிரபல இந்திய கிரிக்கெட் வீரராக வலம் வருபவர் பும்ரா இவரது திருமணம் குறித்து சமீபகாலமாகவே தகவல் இணையதளத்தில் வெளியாகி வருகிறது.

அந்த வகையில் பும்ரா முதலில் அனுபமா பரமேஸ்வரன் என்பவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாக வதந்திகள் பரவி வந்தன இதற்கு முற்றிலும் அனுபமா பரமேஸ்வரன் இது குறித்து விளக்கம் அளித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பும்ரா யாரை திருமணம் செய்யப் போகிறார் என பலரும் கேட்டு வந்த நிலையில் தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது மும்பை பிரபல தொகுப்பாளினி சஞ்சனா கணேசன் என்பவரை திருமணம் செய்யப் போகிறார் என கூறப்படுகிறது.

சஞ்சனா கணேசன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் தொகுப்பாளினியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது இதனையடுத்து பும்ராவும் சஞ்சனா கணேசனும் ஒரு சில ஆண்டுகளாகவே காதலித்து வருவதாகவும் இவர்கள் காதலித்து வருவது இவர்களது பெற்றோர்களுக்கும் தெரியும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இவர்கள் திருமணம் வரும் 14 அல்லது 15 ஆம் தேதி கோவாவில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

Sanjana Ganesan
Sanjana Ganesan

Leave a Comment