என்னை ஏமாத்திட்டாங்க நான் அவுட்டா கிடையாது.! 18 வருடம் கழித்து ஆதாரத்துடன் வீடியோவை பார்த்து கூறிய பிரபல கிரிக்கெட் வீரர்.!

0
cricket
cricket

ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் கில்கிறிஸ்ட் பதினெட்டு வருடங்களுக்கு முன்பு தவறாக அவுட் கொடுக்கப்பட்டதாகவும் அது அவுட்டை கிடையாது எனவும் தற்பொழுது வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ஜமைக்கா இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட்டுக்கு  6 விக்கெட்டுகளை சாய்த்தார் பும்ரா இதில் ஹாட்ரிக் விக்கெட்டும் உண்டு. இவரின் இந்த சாதனைக்கு பலரும் வாழ்த்துக் கூறி வருகிறார்கள்.

இந்த விக்கெட் மூலம் டெஸ்ட் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது இந்திய பவுலர் என்ற பெருமையை அடைந்துள்ளார், 2001ஆம் ஆண்டு கொல்கத்தாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி நடைபெற்றது அதில் பாண்டி, கில்கிறிஸ்ட், வார்னே ஆகிய மூவரையும் ஹர்பஜன்சிங் வீழ்த்தி சாதனை படைத்தார்.

அதேபோல் பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் சல்மான் பட், யூனிஸ்கான், முகமது யூசப் ஆயர்களின் விக்கெட்டை வீழ்த்தி ஒன்பதாம் சாதனை படைத்தார். இதில் ஹர்பஜன் சாதனையை தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

2001 ஆம் ஆண்டு ஹர்பஜன் சிங்கின் சாதனை ஹாட்ரிக் விக்கெட் இன் வீடியோவை டுவிட்டரில் ஒருவர் பகிர்ந்துள்ளார் அதைக்கண்ட கில்கிறிஸ்ட் அப்பொழுது டிஆர்எஸ் என்ற முறை கிடையாது என பதிவிட்டுள்ளார், அதற்கு காரணம் இரண்டாவது விக்கெட்டாக விழுந்தவர் கில்கிறிஸ்ட் ஆனால் அது அவுட் கிடையாது, தொலைக்காட்சி ரிப்ளே வில் பேட்டில் பட்ட பிறகுதான் கால் காப்பில் பந்து பட்டுள்ளது என கூறியுள்ளார்.

பொதுவாக கிரிக்கெட் உலகில் ஜென்டில்மேன் என்றால் அனைவரும் கில்கிறிஸ்ட் தான் கை காட்டுவார்கள், ஏனென்றால் பலமுறை அம்பியார் கையை உயர்த்துவதற்கு முன்பே அவுட் என்றால் தானே வெளியே சென்று விடுவார். இப்படிப்பட்ட இவர் 18 வருடம் கழித்து தான் அவுட் இல்லை என கூறியுள்ளார் இது ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.