மிரட்டல் அடியில் கிறிஸ் கெயில்.! டி-20 இல் இமாலய சாதனை.!

0

கரீபியன் பிரீமியர் லீக் போட்டி நடைபெற்றது இதில் டி20 போட்டியில் ஜமைக்கா – நெவவிஸ் அணிகள் மோதின இந்தப் போட்டியில் விளையாடிய கிறிஸ்து கெயில் எதிரணி பந்துகளை அடித்து துவம்சம் செய்தார்.

62 பந்துகளில் 116 ரன்கள் எடுத்திருந்தார் இதில் சிக்ஸர்கள் பவுண்டரிகள் பறந்தன, மொத்தமாக 10 சிக்சர்கள் மற்றும் 7 பவுண்டரிகள் எடுத்து டி20 போட்டியில் தனது இரண்டாவது சதத்தை பூர்த்தி செய்தார் கிரிஸ் கையில் டி20 போட்டியில் 22 சதங்களுடன் முதலிடத்தில் இருக்கிறார்.

இதற்கு அடுத்ததாக மைக்கல் கிலிங்கர் 8 சதங்களுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறார், கிறிஸ் கெய்லின் அதிரடியை ஜமைக்கா அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த கடின இலக்குடன் அடுத்ததாக களமிறங்கிய நெவவிஸ் அணி எதற்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்தார்கள் வெறும் 18.4 ஓவர்களில் மிக எளிதாக இலக்கை எட்டினார்கள், அதனால் கிரீஸ் கையில் சதம் வீண் போனது நெவவிஸ் அணி தாமஸ் 40 பந்துகளில் 71 ரன்கள் பறக்கவிட்டார், அதனால் மிக எளிதாக வெற்றி பெற்றார்கள்.

அதேபோல் டி20 போட்டியில் அதிக ரசிகர்கள் அடித்த சாதனையும் கையில் வசம்தான் இருக்கிறது. கிறிஸ் கெய்ல் – 954, பொலார்ட் – 622, மெக்கல்லம் – 485.