சுடுகாட்டுக்குப் பதறி ஓடி போன தாய்.!! மறுநாளும் மகனுக்கு கொள்ளி வைத்த திருமானூரில் நடந்த உண்மை சம்பவம்.

சாதியை காரணம் காட்டி சுடு காட்டில் பிணத்தை எரிக்க மறுத்த வேற்று ஜாதியினர். அதனால் பிணத்தை  தகனமேடை வைக்காமல் கீழே வைத்து எரித்ததால் உடல் பாதி எரிந்தும் எரியாமலும் இருந்த செய்தி தாய்க்கு தெரிந்தாலும் தாய் பதறி அடித்து ஓடி வந்து மறுபடியும் கொள்ளி வைத்துள்ளார்.

தமிழகத்தில் அரியலூர் மாவட்டம் திருமானூர் பகுதியை சேர்ந்தவர் கற்பக குமார். கொரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் சலூன் கடைகள் மூடப்பட்டுள்ளதால் பக்கத்து ஊருக்கு சென்றுள்ளார் கற்பககுமார். அங்குள்ள மத்த கடைகளையும் பார்த்துவிட்டு திரும்பும் போது எதிர்பாராத விதமாக லாரி மோதி இறந்துவிட்டார்.

அங்கு உள்ள வேற்று ஜாதியினர் இவரது பிணத்தை எரிப்பதற்காக தயார் செய்து வைத்திருந்த விறகு கட்டைகள் அனைத்தையும் தூக்கி எரிந்து விட்டனர். உடனே  அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீஸார் அங்கு வந்து சமாதானம் பேசினார்கள். ஆனால் எவ்வளவு பேசியும் அங்கு உள்ள வேற்று ஜாதியினர் பிணத்தை எரிக்க மறுத்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து போலீசார்கள் பிரச்சனை வேண்டாம் என நினைத்து பிணத்தை தறையில் வைத்து எரிக்க சொல்லிவிட்டனர். எனவே மறுநாள் பினம் பாதியிலே எரியாமல் கிடக்கின்ற செய்தி தாய்க்கு தெரியவர தாய் பதறி அடித்துக் கொண்டு வந்து அழுது புரண்டு மகனது பிணத்திற்கு மீண்டும் கொள்ளி வைத்துள்ளார். பெண்கள் சுடுகாட்டிற்கு வரக்கூடாது என்ற சடங்கை மீறி வேறு வழி இல்லாமல் தாய் வந்து கொல்லி வைத்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அந்த தாயிடம் விசாரிக்கும் போது கொள்ளி வைப்பதற்கு வைத்துள்ள விறகு கட்டையை எடுத்து வீசினார்கள், தட்டிக் கேட்க போனால் அந்த விறகு கட்டையால் அடிக்க வந்தனர், இது அரசு சுடுகாடு தானே எல்லாருக்கும் பொது தானே  என்று கேட்டதற்கு சாதியைச் சொல்லி திட்டி உள்ளனர். போலீசுக்கு போயி புரோஜனம் இல்லை வேறு வழியில்லாமல் பிணத்தை கீழே வைத்து எரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த நிலைமை வேறு யாருக்கும் வரக்கூடாது என்று அழுதுகொண்டே பேசிய தாய்.

 

 

 

Leave a Comment