சன் டிவி ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் இந்த சீரியலில் அருண் கேரக்டரில் நடித்து வரும் அருணின் அம்மா அப்பா குறித்த தகவல்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்களின் பேர் ஆதரவுடன் மிகவும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் எதிர்நீச்சல். திருச்செல்வம் இயக்கி வரும் நிலையில் அப்பா மகள் பாச போராட்டத்தையும், பெண்கள் தங்களுடைய உரிமைகளை கேட்டு வாங்க வேண்டும் என்பதையும் மையமாக வைத்து கதைகள் அமைந்திருக்கிறது.
ஆதி குணசேகரன் வீட்டில் இருக்கும் அனைத்து மருமகள்களையும் வாட்டி வதைத்து வரும் நிலையில் இதனை தட்டிக் கேட்கும் வகையில் இளைய மருமகள் ஜனனி கேரக்டர் இருந்து வருகிறது. இதனால் வீட்டில் ஏராளமான பிரச்சனைகள் அரங்கேறி வருகிறது எனவே பெண்கள் ஜனனியுடன் இணைந்து தங்களுடைய உரிமைகளைக் கேட்டு போராடி வருகிறார்கள் சமீபத்தில் ஆதிரை அருண் குறித்த காட்சிகள் ஒளிபரப்பாகி வந்த நிலையில் தற்பொழுது கரிகலனுக்கு ஆதிரைக்கும் திருமணம் நடைபெற்ற முடிந்து இருக்கிறது இது பலருக்கும் ஷாக்கிங்காக உள்ளது.
இவ்வாறு அதிரடி திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் அருண் கேரக்டரில் நடித்து வந்து பிரபலமானவர்தான் நடிகர் சாணக்கியா. சாணக்யா குறித்து பலரும் அறியாத தகவலை தற்போது பார்க்கலாம் குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு அறிமுகமான இவர் சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த மெட்டி ஒலி சீரியலின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சின்னத்திரைக்கு அறிமுகமான இவர் இதனை அடுத்து சில சீரியல்கள் திரைப்படங்களிலும் நடித்து வந்துள்ளார். அப்படி நடிகர் அஜித் நடிப்பில் வெளியான பரமசிவன் படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்களிலும் மேலும் முக்கியமான சீரியல்களிலும் நடித்துவரும் நிலையில் சாணக்யாவின் அம்மா அப்பாவுக்கு தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது நடிகர் சாணக்யாவின் அம்மா, அப்பா இருவரும் பிரபலமான நடிகர்கள் தான். சாணக்யாவின் அம்மா சின்னத்திரை நடிகை என்பது குறிப்பிடத்தக்கது இவர் கீதா சரஸ்வதி மற்றும் சன் டிவியில் ஒளிபரப்பான பிரியமான தோழி போன்ற சீரியல்களில் நடித்திருக்கிறார். மேலும் வெள்ளித்திரையிலும் சில திரைப்படங்களில் நடித்த வருகிறார் இவரைத் தொடர்ந்து அவருடைய அப்பா மலையாள நடிகர் ஆவார். சமீபத்தில் அவர் நடித்த வெப் சீரிஸ் ஒன்றும் வெளியாகியிருக்கிறது.