லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் காதலர் விக்னேஷ் சிவனுக்கும் கொரோனாவா.? ரசிகர்கள் ஷாக்.

0

தமிழ்சினிமாவில் நடிகர்களுக்கு இணையாக அதிகப்படியான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளனர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் அவர் ஆர் ஜே பாலாஜி உடன் இணைந்து மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தினை பெரிதும் எதிர்பார்த்து வருகின்றனர் அவரது ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள்.நயன்தாரா அவர்கள் தமிழ் சினிமாவின் இளம் இயக்குனரான விக்னேஷ் சிவனை காதலித்து வருகின்றார் என்ற செய்தியை நாம் அனைவரும் அறிந்ததே.

ஆனால் தற்பொழுது இவர்கள் இருவருக்கும் கொரோனா தொற்று அறிகுறிகள் இருப்பதாகவும் அதற்காக அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் தற்பொழுது தகவல் வெளியாகி உள்ளது மேலும் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் மிஷ்கின் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.இச்செய்தி ரசிகர்களை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது