இணையதளத்தில் பட்டையைக்கிளப்பும் கொரோனா பாடல்.! ‘நான் பொறந்தேன் பத்தூரு காலி’ ‘வளர்ந்தேன் ஜில்லாவே காலி’

சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் படிப்படியாக அதிகமாகி அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, ஈரான், ஸ்பெயின் ஆகிய 160 நாடுகளுக்கு மேல் மிக வேகமாக பரவி வருகிறது, இந்த வைரஸ் மனித இனத்திற்கே மிகப்பெரிய சவாலாக இருக்கிறது.

அதேபோல இந்த வைரஸ் மிக வேகமாக இந்தியாவிலும் பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 724 பேர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள், இதனை கட்டுப்படுத்த பலவிதமாக முயற்சிகளை செய்தும், இதுவரை எந்த ஒரு நிரந்தர தீர்வும் கிடைக்கவில்லை. அதனால் மக்களே விழிப்புணர்வுடன் இந்த நோய் பாதிப்பில் இருந்து தங்களை காத்துக் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

இந்நிலையில் இந்த கொரோனா வைரஸ் பற்றி மீம்ஸ் போட்டு பலவிதமான வழிகளில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள், அந்தவகையில் ஒருசிலர் அஜித்தின் பரமசிவம் படத்தில் இடம்பெற்றுள்ள ஆசை தோசை என்ற பாடலில் இடம்பெறும். சில வரிகளான நான் போகாத ஊரே இல்ல, நான் பொறந்தேன் பத்தூரு காலி வளர்ந்தேன் ஜில்லாவே காலி என்ற பாடல் வரிகள் கொரோனாவுக்கு பொருத்தமாக இருக்கிறது என அனைவரும் இந்த பாடலை தேடி பிடித்து பார்த்து வருகிறார்கள்.

இந்த பாடல் திடீரென சமூகவலைதளத்தில் டிரெண்டிங்கில் வருகிறது.

Leave a Comment