கொரோனா வைரஸ் எதிரொலி தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறையா.?

கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருவதால் தமிழகம் முழுவதும் எல்கேஜி மற்றும் யூகேஜி வகுப்புகளுக்கு மார்ச் 31ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது ஆனால் தற்பொழுது நிருத்திவைக்கபட்டுள்ளது.

கொரோனா வைரஸ் இந்தியாவில் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள், அதேபோல் தமிழகத்திலும் தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்த நிலையில் தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் அதாவது எல்கேஜி மற்றும் யூகேஜி வகுப்புகளுக்கு மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது அனால் தற்பொழுது அதை நிருதிவைக்கபட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல் கேரளாவை ஒட்டியிருக்கும் கன்னியாகுமரி, தேனி, நெல்லை, தென்காசி, கோவை, திருப்பூர்,நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு ஐந்தாம் வகுப்பு வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் கேரளா,டெல்லி, சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் அந்த மாநிலங்களில் திரையரங்குகள் மற்றும் மக்கள் அதிகமாகக் கூடும் மால்களையும் மூட சொல்லி உள்ளார்கள்.

மேலும் , ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் உள்ள கோவில்களுக்கு நோயின் அறிகுறி உள்ளவர்கள் வரவேண்டாம் என அறிவித்துள்ளார்கள்.

Leave a Comment