கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக கோடி கோடியாகக் கொட்டிக் கொடுத்த சன் நிறுவனம்.? எத்தனை கோடி தெரியுமா.?

corona : தமிழ் தொலைக்காட்சிகளில் டிஆர்பியில் முதலிடத்தில் இருக்கும் தொலைக்காட்சி என்றால் சன் தொலைக்காட்சி தான், நீண்டகாலமாக டி ஆர் பி யில் முதலிடத்தில் இருக்கும் சன் தொலைக்காட்சி நிறுவனம்.

உலகம் முழுவதும் வைரஸ் மிக வேகமாக பரவி வருவதால் தற்போது நாடு முழுவதும் 144 தடை விதிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது, அதனால் பல்வேறு படப்பிடிப்புகளும் சீரியல் படப்பிடிப்புகளும் தடைபட்டுள்ளது.

நாடு முழுவதும் 144 தடை விதிக்கப்பட்ட உள்ளதால் மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது அதனால் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது, ஆனால் இந்த கொரோனா நோயை விரட்டுவதற்கு வேற வழியே இல்லை அதனால் மக்கள் ஒத்துழைப்பு தந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் மக்களின் அத்தியாவசியப் பொருள்களுக்காகவும் கொரோனா வைரசை கட்டுபடுத்துவதற்காகவும் பல்வேறு பிரபலங்கள் நிதியுதவி அளித்து வருகிறார்கள் அந்த வகையில் தொலைக்காட்சிகளில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் சன் நிறுவனம் 10 கோடி ரூபாய் நன்கொடை கொடுத்து உதவி செய்துள்ளது,.

அதுமட்டுமில்லாமல் ஜீ தமிழ் தொலைக்காட்சி பெப்சி ஊழியர்களுக்கு நன்கொடை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. சன் தொலைக்காட்சி நிறுவனம் 10 கோடி கொடுத்துள்ளதால் இதற்கு பல்வேறு பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Comment