பாகுபலி இயக்குனர் ராஜமெளலிக்கு கொரோனா தொற்று.! இதோ அவரே வெளியிட்ட தகவல்

0

இயக்குனர் ராஜமவுலி தெலுங்கு சினிமாவில் கொடிகட்டி பறந்து வரும் இயக்குனர் ஆவார், அதுவும் இவர் எடுத்த பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு இந்தியாவை கொண்டாடும் இயக்குனர் ஆவார், பாகுபலி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாகவும வெற்றி பெற்றது.

அதுமட்டுமில்லாமல் ராஜமௌலி இயக்கத்தில் நடிப்பதற்காக ரஜினி முதல் சல்மான்கான் வரை காத்திருக்கிறார்கள் அந்த அளவு மிகவும் பெயர் போன இயக்குனர், அதேபோல் ஒரே ஒரு திரைப்படத்தின் மூலம் இந்தியா முழுவதும் தன்னுடைய புகழை பரப்பி விட்டார்.

இந்தநிலையில் ராஜமௌலி இயக்கத்தில் தற்போது ‘ஆர் ஆர் ஆர்’ படம் உருவாகி வருகிறது, ஆனால் தற்பொழுது கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் பல்வேறு படப்பிடிப்புகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது அதேபோல் இந்த திரைப்படமும் நிறுத்திவக்கப்பட்டுள்ளது.

சினிமாவில் இருக்கும் பல பிரபலங்களுக்கு கொரோனா நோய் தொற்று மிக வேகமாகப் பரவி வருகிறது, சமீபத்தில் கூட ஐஸ்வர்யா ராய் அமிதாப்பச்சன் என பலருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டது.

அந்த வகையில் தற்பொழுது ராஜமவுலி அவர்களுக்கு கொரோனா நோய் தொற்று இருப்பதாக அவரே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார், அதுமட்டுமல்லாமல் அவரின் குடும்பத்தினரும் இதற்காக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இவரின் இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, ராஜமவுலி மீண்டு வரவேண்டும் எனவும் மீண்டுவந்து பிரம்மண்ட திரைப்படத்தை ரசிகர்களுக்காக கொடுக்க வேண்டுமெனவும் கமெண்ட் செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.

பிரமாண்ட இயக்குனர் ராஜமவுலிக்கு கொரோனா இருப்பது சினிமா பிரபலங்களுக்கு இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.