ராகவா லாரன்ஸ் டிரஸ்டில் இருக்கும் குழந்தைகள்,பணிபெண்களுக்கு கொரோனா தொற்று.! அச்சத்தில் ராகவா லாரன்ஸ்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ராகவா லாரன்ஸ் இவர் தமிழ் சினிமாவில் நடிகர் மட்டுமில்லாமல் அதையும் தாண்டி இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் பல படங்களில் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது இவர் சமீபகாலமாக முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து பல வெற்றிகளை குவித்தார் இதனை தொடர்ந்து தற்போது தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடத்தைப் பிடித்துள்ளார்.

ராகவா லாரன்ஸ் சினிமா உலகைத் தாண்டி பல ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கும் டிரஸ்ட் ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இதனால் அவருக்கு தமிழகம் முழுவதும் பல்வேறு ரசிகர்கள் இருந்து வருகிறார். தற்பொழுது நாடு முழுவதும் தாக்கம் அதிகரித்துள்ளதால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் இதனை அடுத்து சினிமா பிரபலங்கள் வெகு சிலரே பணம் மற்றும் நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகின்றன அந்த வகையில் முதன்மையானவர் ராகவா லாரன்ஸ் இதுவரை சுமார் மூன்று கோடிக்கு மேலாக நிதிகளை வாரி வழங்கி வந்து கொண்டிருக்கிறார்.

அது மட்டுமில்லாமல் எந்தத் துறையைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார் அந்த வகையில் துப்பறிவாளர், சினிமா கலைஞர்கள், தயாரிப்பாளர்களுக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.

ragava
ragava

இந்த நிலையில் ராகவா லாரன்ஸ் நடத்திவரும் டிரஸ்டில் சுமார் 20 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. ராகவா லாரன்ஸ் டிரஸ்ட் அசோக் நகரில் நடத்தி வருகிறார் இதில் பலர் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் தங்கி உள்ளனர் இதில் தற்பொழுது 10 மாணவிகள் 5 மாணவர்கள் 3பணியாட்கள் 2 சமையல்காரர்கள் என மொத்தம் 20 பேருக்கு தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது தற்பொழுது இந்த 20 பேரும் நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் அவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறது மேலும் டிரஸ்டில் இருந்த அனைவரையும் சோதனை செய்து வருகிறார்கள் மருத்துவர்கள்.  இச்செய்தியை சமூகவலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது

Leave a Comment