108 ஆம்புலன்ஸ் வருவதற்கு காலதாமதம் ஆனதால் சரக்கு வண்டியில் அழைத்து வரப்பட்ட கொரோனா நோயாளி.! மதுரையில் பெரும் பரபரப்பு

நாடு முழுவதும் கொரோனா தோற்று மிக வேகமாகப் பரவி வருகிறது. அதேபோல் தமிழ்நாட்டில் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால்  தமிழ்நாட்டில் ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மக்கள் பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்கும்படி அரசும் அறிவுறுத்தி வருகிறது.

மேலும் நாளுக்கு நாள் கொரோனா தோற்று அதிகரித்து வருவதால். மருத்துவமனையில் இடம் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள் மக்கள். இந்தநிலையில் மதுரை பாலமேடு அருகே மூடுவார்பட்டியை சேர்ந்தவர் பரணிமுத்து இவருக்கு வயது 31 இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு இருந்து வந்தார். ஆனால் இன்று திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது அதனால் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு தொடர்புகொண்டு அழைத்துள்ளார்.

அப்பொழுது ஆம்புலன்ஸ் வருவதற்கு காலதாமதம் ஆனதால் அருகிலுள்ள சரக்கு ஆட்டோவில் 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு கொரோனா நோயாளியை ஏற்றிச் சென்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள் பிறகு கொரோனா நோயாளியை அரசு மருத்துவமனை ஒரு சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை படுக்கை பற்றாக்குறை நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்காமல் என பல்வேறு புகார்கள் எழுந்து வரும் நிலையில் தற்போது 108 ஆம்புலன்ஸ் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது வருத்தத்தை கொடுத்துள்ளது. மேலும் அரசு ராஜாஜி மருத்துவமனை தென்மாவட்ட மக்கள் அனைவரின் மருத்துவ தேவையை பூர்த்தி செய்து வருகிறது எனவே சென்னை கிழக்கு நகரான மருத்துவ கட்டமைப்பை மதுரையில் ஏற்படுத்த வேண்டும் அரசு மதுரைக்கு தனிக்கவனம் செலுத்த வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளார்கள் மதுரையில்.

இந்த நிலையில் கொரோனா நோயாளியை 30 கிலோ மீட்டர் தூரம் வரை சரக்கு வண்டியில் ஏற்றி வந்தது பார்ப்பவர்களுக்கு வேதனையை அளித்துள்ளது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment