தமிழகத்தை உலுக்கும் கொரோனா.! இன்று மட்டும் எத்தனை பேர் தெரியுமா.! மாவட்ட வாரியாக இதோ லிஸ்ட்.!

corona impact in Tamil Nadu still exceeds 100 : சீனாவில் உருவாக்கிய கொரோனா வைரஸ் படிப்படியாக உலக நாடுகள் முழுவதும் பரவி வருகிறது, இந்த கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தற்போது மிக வேகமாக பரவி வருகிறது, நாளுக்கு நாள் கொரோனாவால் பதிக்கப்பட்ட நோயாளிகள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

அதே போல் தமிழகத்திலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது, இதனை கட்டுப்படுத்த 144 தடை விதிக்கப்பட்டு மக்கள் அனைவரும் கடைபிடித்து வருகிறார்கள், ஆனால் ஒரு சில இளைஞர்கள் இதை எதையும் பொருட்படுத்தாமல் சுற்றிதிரிகிறார்கள் அவர்களை போலீஸார் எச்சரித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் இன்று சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி தமிழகத்தில் மட்டும் இன்று புதிதாக 104 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது, இந்த புதிய லிஸ்டில் மிக அதிகமாக பாதிக்கப் பட்டுள்ளது சென்னைதான், சென்னையில் மட்டும் 94 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள், அதேபோல் இன்று இரண்டு பேர் பலியாகி உள்ளார், அதுமட்டுமில்லாமல் 82 பேர் குணமடைந்து வீட்டுக்கு திரும்பி உள்ளார்கள்.

இதனால் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,210 ஆக அதிகரித்துள்ளது, அதேபோல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது.

corona distric-tamil360newz
corona distric-tamil360newz
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment