மாஸ்டர் பிரபலத்திற்கு கொரோனா இதோ அவரே வெளியிட்ட பதிவு.!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். சமீபத்தில் இவர் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் வெளிவந்து மாபெரும் வெற்றியை படைத்துள்ளது.

இந்த திரைப்படத்திற்கு பிறகு லோகேஷ் காமராஜரின் திரை வாழ்க்கை எங்கேயோ போய்விட்டது. இந்த திரைப்படத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்துள்ளார்.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு கமல் ஹாசன் நடித்து வரும் விக்ரம் திரைப் படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்தல் பிரச்சாரம் இன்று மிகவும் பிஸியாக இருப்பதால் அப்படத்தின் படப்பிடிப்பு தள்ளி போய் உள்ளது.

என்னைத் தொடர்ந்து தளபதி 66 மற்றும் விஜய் சேதுபதி உடன் ஒரு படத்தை இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.  ஆனால் அனைத்து தமிழ் நடிகர்களுக்கும் டாட்டா காண்பித்துவிட்டு தெலுங்கு நடிகரான பிரபபாஸ்வுடன் கை கோர்த்துள்ளார்.

நடிகர் பிரபாஸ் பெரிதாக தமிழ் திரைப் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் பாகுபலி மற்றும் பாகுபலி-2 இந்த இரண்டு திரைப்படங்களிலும் தனது சிறந்த நடிப்பின் மூலம் அனைத்து ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தார்.

இந்நிலையில் மாஸ் ஹீரோ மற்றும் மாஸ் இயக்குனர் இருவரும் இணைந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. பொதுவாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் அனைத்து திரைப்படங்களுமே பல கோடி பட்ஜெட்டில் ரசிகர்களை கவரும் வகையில் இருந்து வருகிறது.

எனவே இந்த படமும் அதிகமான பட்ஜெட்டில் தான் உருவாகும் என்று கூறி வருகிறார்கள். இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்து உள்ளார்கள்.

அதில் நான் கொரோன டெஸ்ட் எடுத்தேன் பாசிட்டிவ் வந்துள்ளது. எனவே பிரைவேட் ஹாஸ்பிடலில் அட்மிட்டாகி உள்ளேன் விரைவில் இதிலிருந்து வெளியே வருவேன் என்று கூறியுள்ளார்.

Leave a Comment