பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு கொரோனா..! மிகுந்த மன வருத்தத்தில் ரசிகர்கள்..!

0
sharukhan
sharukhan

பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் ஷாருக்கான் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தற்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வீட்டிலேயே சிகிச்சை எடுத்து வருவதாக செய்திகள் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

சமீபத்தில்தான் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு தோற்று ஏற்பட்டதாக உறுதி செய்யப்பட்டிருந்தது இதனைத் தொடர்ந்து பிரபல முன்னணி நடிகர்களாக வலம்வந்த கார்த்திக் ஆரியர், ஆதித்யா ராய் கபூர் ஆகியோருக்கும் தொற்று இருப்பதாக கூறப்பட்டன.  இதன் விளைவாக மறுபடியும் வைரசின் வீரியம் அதிகரிக்கப் போகிறது என பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் இருந்தார்கள்.

இந்நிலையில் தற்போது ஷாருகான் அட்லி இயக்கத்தில் ஜவான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படம் நேற்று முன் தினம் தான் டைட்டில் குறித்த வீடியோ வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் இந்த திரைப்படமானது தமிழ் மட்டுமின்றி ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து தீபிகா படுகோன் நடிப்பில் ஷாருக்கான் இணைந்து நடித்த ஆக்சன் திரைப்படம் ஒன்று அடுத்த ஆண்டு ஜனவரி திரையரங்கில் வெளியாக உள்ளதாக தெரியவந்துள்ளது. அந்தவகையில் தற்போது சுமார் 3 திரைப்படங்கள் ஷாருக்கான் நடிப்பில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து ஜவான் திரைப்படத்தின் அறிவிப்பு குறித்து செய்தியாளர்கள் ஷாருக்கான் இடம் பேட்டி எடுத்துள்ளார்கள் அப்போது பேசிய ஷாருக்கான் இந்த திரைப்படத்தின் கதை அனைத்து வகையான ரசிகர்களை கவரும் வகையில் இருக்கும் என்று கூறியது மட்டுமில்லாமல் இயக்குனர் அட்லிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் ஷாருக்கானுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் விரைவில் அவர் குணமாக வேண்டும் என பல ரசிகர்களும் வேண்டுதல் வைத்து வருகிறார்கள்.