கொரோனா எதிரொலி தெருத்தெருவாக இறங்கி கிருமிநாசினி தெளிக்கும் பிரபல நடிகர்.!

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது அதே போல் தமிழகத்திலும் மிக வேகமாக பரவி வருகிறது இதனால் 144 தடை விதிக்கப்பட்டு மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் பிரபலங்கள் அனைவரும் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தங்களது சமூக வலைதளத்தில் விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள், மேலும் 24 மணி நேரமும் வீட்டிலேயே தங்கி இருக்கும் பிரபலங்கள் தங்களுக்கு போரடிக்காமல் இருப்பதற்கு புத்தகங்கள் படிப்பது, சமைப்பது, கார்டனில் வேலை செய்வது நடனமாடுவது என தங்களை பிஸியாக வைத்துக் கொள்கிறார்கள்.

இவர்களுக்கெல்லாம் ஒருபடி மேலே சென்று தனது சொந்த ஊரான திருச்சி மாவட்டம் பன்னாங்கொம்பு கிராமத்தில், நடிகர் விமல் அனைத்து தெருக்களிலும் கிருமி நாசினி தெளித்து உள்ளார் இந்த புகைப்படம் இணையதளத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் இவரை பாராட்டி வருகிறார்கள்.

vimal
vimal

Leave a Comment