அஜித் சொல்லும் வழியை கடைபிடித்தால் கொரோனா நம்மை நெருங்காது.! காவல்துறை வெளியிட்ட புகைப்படம்

கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது அந்த வகையில் தற்போது இந்தியாவிலும் அது பரவிக்கொண்டிருக்கிறது அதனை தடுக்கும் வகையில் இந்தியா முழுவதும் 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது தடை மார்ச் 14 வரை நீடிக்கும் என இந்திய அரசு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் இருக்க எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இந்தநிலையில் பொதுமக்கள் தனது வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.இந்நிலையில் விழிப்புணர்வு வெளிப்படுத்தும் விதமாக சினிமா பிரபலங்கள் மற்றும் அவரது குழந்தைகள் வீடியோக்களை வெளியிட்டு விழிப்புணர்வு வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தேனி மாவட்ட காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மீம்ஸ் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். அஜித்தை வைத்து உருவாக்கியுள்ள இந்த மீம்ஸ் புகைப்படத்தில், கொரோனா பரவுகிறது பாதுகாப்பாக இருக்கணும் என அஜித் கூறுவது போலவும் அதற்கு ஒரு குழந்தை எப்படி என கேட்க ”வீட்டில் தனிமை அதுதான் நம் வலிமை” என அஜித் கூறுவது போல உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சி தற்போது சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

Leave a Comment