கொரோனா விழிப்புணர்வு காலர் டியூன்.! வடிவேல் வெர்சனை வெளியிட்ட நெட்டிசன்கள்.! கொரோனாவை விட வேகமாக பரவுதே.

உலக நாடுகளையே நடுநடுங்க வைத்துள்ளது கொரோனா வைரஸ் தற்பொழுது இந்தியாவிலும் பரவி வருகிறது, அதனால் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் செல்போன் மூலம் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஆடியோவை காலர் டியூனாக வைத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் அரசு அலுவலகங்களில் பயோமெட்ரிக் சிஸ்டத்தை நிறுத்தி வைத்துள்ளார்கள்.

மேலும் அலுவலகத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் அனைவரையும் சோதனை செய்த பிறகு அலுவலகத்திற்கு உள்ளே அனுமதிக்கபடுகிரார்கள், இந்த நிலையில் செல்போனில் காலர் டியூன்னாக கொரோனா வைரஸ் எச்சரிக்கை ஆடியோவை வைத்துள்ளதால் மக்கள் கொஞ்சம் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள்.

சிலர் அதிகமாக போன் செய்வதால் கொஞ்சம் எரிச்சலாக இருக்கும், ஏன் ஏனென்றால் ஒவ்வொரு முறையும் அந்த ஆடியோவை கேட்பதால், அதற்கு மொபைலில் உள்ள # பட்டனை அழுத்தினால் இந்த சேவை நின்று உடனே ரிங் ஆகும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

இந்தநிலையில் இந்த ஆடியோவை வைத்து வடிவேல் வெர்ஷன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்கள் நெட்டிசன்கள். இந்த வீடியோ கொரோனோ வைரஸை கிண்டல் செய்வது போல் இருந்தாலும் ஒரு பக்கம் விழிப்புணர்வை அதிகப்படுத்தி வருகிறது.

https://youtu.be/9UQRNT3eguo

Leave a Comment