அஜித் பட பாடலை அசால்டாக வாசிக்கும் காவல்துறையினர் இணையதளத்தை ஸ்தம்பிக்க வைக்கும் வீடியோ!!

தமிழ் திரை உலகில் கொடி கட்டி பறந்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவர் தல அஜித். இவர் கடந்த ஆண்டு நடித்து வெளிவந்த படம் விஸ்வாசம். இதற்கு முன்பு விகேவம் வசூல் மற்றும் விமர்சனரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனை  தொடர்ந்து சிறுத்தை சிவா  நான்காவது படமாக விஸ்வாசம் எடுக்கப்பட்டதால் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே சற்று சலசப்பு எற்ப்பட்டது.

இருப்பினும் இப்படம் வெளிவந்து அதை எல்லாத்தையும் தவிடு பொடி ஆகியது ஏனென்றால் இப்படம் அப்பா, மகள் பாசத்தை வெளிப்படுத்தும் படமாக அமைந்திருந்ததால் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. தொடர்ந்து வெளிவந்த நேர்கொண்ட பார்வையும் மக்கள் மத்தியில் அதுவும் குறிப்பாக பெண்கள் மத்தியில் இது ஒரு நல்ல வரவேற்ப்பை பெற்றது. படம் சமுதாயத்திற்கு ஒரு நல்ல கருத்தை எடுத்து உள்ளது என மக்கள் மத்தியில் கூறப்பட்டு வருகிறது இப்படம் வசூல் ரீதியாகவும் மற்றும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது.

இதனை தொடர்ந்து அஜித் அவர்கள் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து ஹெச் வினோத் அவர்கள் தற்போது வலிமை படத்தை இயக்கி வருகிறார். போனி கபூர் அவர்கள் வலிமை படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தின் சூட்டிங் ரகசியமாக ரமோஜி பிலிம் சிட்டியில் எடுக்க காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் நாயகி மற்றும் வில்லன் காமெடி என யார் யார் நடிக்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியாமல் படக்குழுவினர் ரகசியமாக வைத்துள்ளனர் என்பது குறிபிடத்தக்கது.

மேலும்  இப்படத்தில் அஜித் அவர்கள் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. நவதீப் மற்றும் உமா போன்ற பல பிரபலங்கள் இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால்  படக்குழுவினர் எந்த ஒரு அறிவிப்பும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

இந்த நிலையில் அவர் நடித்து வெளிவந்த விஸ்வாசம் படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் பாடலை கேரளா காவல்துறை அதிகாரி ஒருவர் கண்ணான கண்ணே என்ற பாடலை தனது கிட்டாரில் வாசித்துக் காட்டி நம்மை நெகிழ வைத்துள்ளார். தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது. இதனை பார்த்த அஜித் ரசிகர்கள் கேரள காவல்துறையிடம் அஜித் கிடைத்த மிகப்பெரிய வரவேற்பு என்று கூறிவருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் இந்த வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டு பரப்பி வருகிறார்கள்.

https://twitter.com/unnivishnu1992/status/1232749227790491654

Leave a Comment