குக் வித் கோமாளி அடுத்த சீசன் தொடங்க போகுது- எந்த மாதத்தில் தெரியுமா.? ரசிகர்களே கொண்டாட ரெடியா இருங்க..

சின்னத்திரையில்  மக்களிடையே அமோக வரவேற்பை பெற்று சீசன் சீசனாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சிக்கு என தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளனர். அந்த அளவிற்கு மக்கள் மற்றும் ரசிகர்கள் இதனை விரும்பி பார்க்கின்றனர்.

இந்த கொரோனா காலகட்டத்தில் இது நமக்கு பொழுது போக்காக இருந்த ஒரு நிகழ்ச்சியாகும்.  இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து இரண்டு சீசன்களாக வெங்கடேஷ் பட் மற்றும் தாமு ஜட்ஜ் ஆக இருந்தனர் மற்றும் இந்த நிகழ்ச்சியை 2 சீசன்களாக ரக்ஷன் தொகுத்து வழங்கி வருகிறார் .

கடந்த இரண்டு சீசன்களிலும் கலந்துகொண்ட போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியின் மூலம் அவர்களுக்கு பல ரசிகர்கள் கூட்டம் உருவாகின பின்பு வெள்ளித்திரையிலும் பட வாய்ப்புகள் அதிகம் உருவாகின, அந்தவகையில் குக்கு வித் கோமாளி  சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரம்யா பாண்டியன் இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் வெள்ளித்திரையில் பல வாய்ப்புகள் அவருக்கு வந்தன.

இரண்டாவது சீசனில் கலந்துகொண்ட கனி பவித்ரா, தர்ஷா குப்தா,அஷ்வின் போன்ற பலருக்கும் வெள்ளித்திரையில் பட வாய்ப்புகள் கிடைத்தன. இவர்கள் மட்டும் அல்லாமல் இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்துகொண்ட புகழ், பாலா, சிவங்கி போன்ற பலரும் வெள்ளித்திரையில் அடியெடுத்து வைத்துள்ளனர். இதுபோல் பல கலைஞர்களை வளர்த்துவிட்டது இந்த நிகழ்ச்சியாகும்.

தற்போது ரசிகர்கள் அனைவரும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் குக்கு வித் கோமாளி  சீசன் 3 நிகழ்ச்சி நவம்பர் மாதம் மூன்றாவது வாரத்தில் தொடங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகின. இதில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் யார் யார் என இன்னும் தகவல்கள் வெளிவரவில்லை. அதுமட்டுமல்லாமல் பழைய கோமாளிகள் தொடர்ந்து இந்த சீசனில் கலந்து கொள்வார்களா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவி வருகின்றன.

Leave a Comment