மாநாடு திரைப் படத்தில் சிம்புவுடன் மாசாக நடிக்கும் குக் வித் கோமாளி புகழ்.! வைரலாகும் ஷூட்டிங் புகைப்படம்.!

சிம்பு சுசீந்திரன் இயக்கத்தில் உருவான ஈஸ்வரன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் அந்த திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியான போது ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றது மேலும் சிம்பு அடுத்ததாக வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகும் இந்த திரைப்படத்தை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இந்தத் திரைப்படத்திற்காக இசையமைத்து வருகிறார்.மாநாடு திரைப் படத்தில் சிம்புவுடன் இணைந்து கல்யாணி பிரியதர்ஷன்,பாரதிராஜா, கருணாகரன்,பிரேம் ஜி,எஸ் ஜே சூர்யா போன்ற ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகிறார்கள் என்றுதான் கூறவேண்டும்.

அதுமட்டுமல்லாமல் மாநாடு படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே வேகமாக வைரலாகி வந்தது மட்டுமல்லாமல் சிம்பு இந்த படத்தில் வேற லெவல் தான் நடித்து இருப்பார் என ரசிகர்கள் பலரும் கூறி வந்தார்கள்.

இந்நிலையில் குக் வித் கோமாளி புகழ் சிம்புவுடன் இணைய உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பே தகவல் கிடைத்தது இந்நிலையில் சிம்பு உடன் இந்த திரைப்படத்தில் குக் வித் கோமாளி நடிக்கிறார் என உறுதி செய்யும் வகையில் ஒரு புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது ஆம் சிம்பு புகழுடன் பேசிக்கொண்டிருக்கிறார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

simbu
simbu

இதனையடுத்து புகழ் ஏற்கனவே தளபதி 65,வலிமை,விஜய் சேதுபதியுடன் 46வது திரைப்படம் சந்தானம் என பல படங்களில் கமிட் ஆகியுள்ளார் என தகவல் கிடைத்தது இந்நிலையில் இவர் மிகப்பெரிய பிரபலங்களில் ஒருவராக வலம் வருவார் என ரசிகர்கள் பலரும் கூறி வருகிறார்கள்.

Leave a Comment