மாஸ்டர் வாத்தி கம்மிங் பாடலுக்கு சீன் போட்டு குப்பறக்க விழுந்த குக் வித் கோமாளி புகழ்.! வைரலாகும் வீடியோ.!

விஜய் டிவி தொலைக்காட்சி ஒளிபரப்பாகி வரும் எல்லா நிகழ்ச்சிகளும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சியாக தான் அமைந்து வருகிறது அந்த வகையில் ஒரு நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி இந்த குக் வித் கோமாளி சீசன்2 தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த இரண்டாவது சீசனில் பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு ஒவ்வொரு டாஸ்கிலும் வெற்றி பெற்று வருகிறார்கள் அந்த வகையில் இந்த குக் வித் கோமளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கி வரும் நடிகர் தான் புகழ்.

இவர் இதற்கு முன்பு அதே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பல நிகழ்ச்சிகளில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டுள்ளார் ஆனாலும் அப்போதெல்லாம் ரசிகர்களிடையே பிரபலம் அடையவில்லை.

இந்த நிகழ்ச்சில் பங்கு பெற்றதன் மூலம் ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தது மட்டுமல்லாமல் பல திரைப்படங்களில் இவர் நடித்து வருகிறார் இவர் விஜய் சேதுபதி,சிவகார்த்திகேயன்,அருண் விஜய் போன்ற பிரபல முன்னனி நடிகர்களுடன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

சினிமாவில் படு பிசியாக இருந்தாலும் புகழின் புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளப் பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருவதை நாம் பார்த்து வருகிறோம்.அதேபோல் தற்போதும் இவரது வீடியோ காணொளி ஒன்று சமூக வலைதளப் பக்கங்களில் ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவை பார்த்தால் மாஸ்டர் படத்தில் விஜயை எப்படி சோபாவில் இருந்து தூக்கி போவார்களோ அப்படி இவரை தூக்கி வருகிறார்கள் அப்போது இவர் கீழே விழுகிறார்.மேலும் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் சாமியே சைக்கில்ல போகுது பூசாரிக்கு எதுக்கு புல்லட்டு என்ற பழமொழியை வைத்து இவரை கலாய்த்து வருகிறார்கள்.

இந்த வீடியோ காணொளியை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்.

Leave a Comment