கூடிய விரைவில் தொடங்கயுள்ள குக் வித் கோமாளி சீசன் 3 – கலந்து கொள்ளும் பிக்பாஸ் 5 பிரபலம்?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முகம் தெரியாத பல முகங்கள் கலந்துகொண்டு தமிழ் மக்களிடையே பிரபலமாகி சினிமா துறையில் சிறப்பாக பயணித்து வருகின்றன. அந்த வகையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் ஐந்தாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர்தான் தாமரைச்செல்வி.

இவர் திண்டுக்கல்லில் இருந்து வந்த மேடை நாடக கலைஞர் ஆவார். மேலும் இவர் இளம் வயதிலேயே வறுமையின் காரணமாக நாடகத்துறையில் சேர்ந்து பின்பு படிப்படியாக அந்த துறையில் முன்னேறி இதன்மூலம் பிக் பாஸ் வாய்ப்பையும் பெற்றவர் தாமரை.

மேலும் இவர் பிக்பாஸ் ஐந்தாவது நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஒன்றும் தெரியாமல் வந்து இருந்தாலும் பின்பு போட்டியை பற்றி நன்கு புரிந்து கொண்டு சிறப்பாக விளையாடி வந்தார்.   தாமரைச்செல்வி பிக்பாஸ் வீட்டில் 90 நாட்களுக்கு மேல் பயணித்து வந்தவர் மேலும் பைனல்சின் அருகாமை வரை சென்று சென்ற வாரம் தான் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

இந்த நிலையில் விஜய் டிவியில் கூடிய விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி குறித்து ப்ரோமோ வெளியாகியது. மேலும் இந்த நிகழ்ச்சியில் ஊர்வசி, வீஜே அர்ச்சனா, விஜயலட்சுமி போன்ற பல பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. தற்போது இவர்களில் தாமரைச்செல்வி பெயரும் அடிபட்டு வருகிறது.

பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது தாமரையின் சமையல் குறித்து அனைத்து போட்டியாளர்களும் பாராட்டி உள்ளனர் அந்த அளவிற்கு தாமரையும் நன்றாக சமைக்கக் கூடிய ஒருவர் தான் இந்த நிலையில் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் தாமரைச்செல்வி கலந்து கொள்வார் என தகவல்கள் வெளியாகி வருகிறது.

Leave a Comment