குக் வித் கோமாளி போட்டியாளர்களுக்கு ஒரு எபிசோடுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா.! ஆனா புகழுக்கு மட்டும் கொசுறு காசு தான்.

விஜய் டிவியில் ஒலிபரப்பாகும் அனைத்து ஷோக்களுக்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. சீரியல், ரியாலிட்டி ஷோ, கேம் ஷோ என அனைத்துமே ரசிகர்களை கவரும் வண்ணம் உள்ளது. அதிலும் குறிப்பாக விஜய் டிவி எந்த ஒரு சேனலையும் பார்த்து காப்பி அடிக்காமல் இருப்பதாலேயே ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.

அந்த வகையில் தற்போது பிக்பாஸை தொடர்ந்து ரசிகர்களால் அதிகம் பார்க்கப்படும் ஷோ குக் வித் கோமாளி. இந்த ஷோவில் வரும் கோமாளியான சிவாங்கி மற்றும் புகழ் போன்றோருக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். அவர்களுக்காகவே இந்த ஷோவை பலர் பார்க்கின்றனர்.

இந்த நிலையில் இந்த ஷோவில் அதிகபட்சமாக நடிகை ஷகிலாவிற்கு 50 ஆயிரம் ரூபாயும், நடன இயக்குனரான பாபா பாஸ்கர் மற்றும் மதுரை முத்துவிற்கு 40,000 ரூபாயும் வழங்குகிறார்கள்.  நடிகர் அஸ்வினுக்கு 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் தரப்படுகிறது.

கோமாளிகளான சுனிதா, சிவாங்கி, மணிமேகலை போன்றோருக்கு 20 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு முக்கியமாக இருக்கும் பூகழ் மற்றும் பாலாவுக்கு 15 ஆயிரம் ரூபாய் சம்பளமாக அளிக்கப்படுகிறது.

நடிகை தர்ஷா குப்தா, பவித்ரா, தீபா போன்றோருக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது என தகவல் வெளியாகியுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் சிவாங்கி, பாலா மற்றும் புகழுக்கு இவ்வளவு கம்மியான சம்பளமா என வருத்தத்தில் உள்ளனர்.

Leave a Comment