குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஒயில்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே வருகிறீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த தேஜு நடிகை.!

விஜய் தொலைக்காட்சியில் டஜன் கணக்கில் சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்பி டி ஆர் பி இல் இடம் பிடித்து வருகிறார்கள் அந்த வகையில் பல ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்பி வருகிறார்கள் அதில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாக பார்க்கப்படுவது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்.

இந்த நிகழ்ச்சி முதல் இரண்டு சீசன்களில் முடிவடைந்த நிலையில் தற்போது 3வது சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த வாரம் ஒயல்ட் கார்ட் என்ட்ரியாக  யார் யார் உள்ளே வர போகிறார் என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ரசிகர்கள் பலரும் டான்ஸர் நடிகையுமான தேஜு அஸ்வின் உள்ளே வருகிறார் என பலரும் கணித்து கூறி வந்தார்கள் இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு  தேஜு பதில் அளித்து வந்தார் அப்பொழுது ரசிகர் ஒருவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஒய்ல்ட் கார்ட் என்ட்ரியாக வருவீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது சத்தியமா நான் அதில் வரவில்லை எனக்கு சமைக்கவே தெரியாது அப்படியானால் நிச்சயம் நான் உங்களிடம் சொல்லி இருப்பேன் எனக் கூறியுள்ளார் இவர் கூறியதை பார்த்தால் இவர் உள்ளே வரப் போவதில்லை எனத் தெளிவாக தெரிய வந்துள்ளது.

thji aswin

Leave a Comment

Exit mobile version