ரம்யா பாண்டியனை ஓரங்கட்ட மொட்டை மாடியில் போட்டோ ஷூட் நடத்தி மிரளவைத்த குக் வித் கோமாளி பவித்ரா.! இனி அவ்ளோதான் போல

0

சினிமாவில் நடிப்பதற்காக பலரும் போராடி வருகிறார்கள் அதிலும் சமூக வலைத்தளத்தை பயன்படுத்தி பலரும் சினிமாவில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்கள். சமூக வலைதளத்தின் மூலம் பல நடிகைகள் நடிக்க ஆரம்பித்து விட்டார்கள். இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த குக்வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் பவித்ரா லட்சுமி.

இந்த நிகழ்ச்சி மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தனது கட்டுக்குள் வைத்திருக்கிறார் பவித்ரா தற்பொழுது குக் வித் கோமாளி இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். மேலும் இவர் மாடலிங் துறையில் அதிகமாக பணியாற்றியுள்ளார்.  இவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நல்ல ரெஸ்பான்ஸ் என்றால் இவர் புகழ் உடன் சேர்ந்து செய்யும் விஷயங்கள் தான்.

pavithra lakshmi
pavithra lakshmi

புகழ் மற்றும் பவித்ரா இருவரும் இணைந்தால்  ரசிகர்களுக்கு ஒரே குஷிதான் அதுமட்டுமில்லாமல் இவர்கள் இருவரும் ரொமான்ஸ் செய்யும் விதமாக பல விஷயங்களை செய்துள்ளார்கள் அதுதான் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த நிலையில் பவித்ரா லட்சுமிக்கு ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஏஜிஎஸ் நிறுவனத்தின் அடுத்த படத்தில் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார்.

pavithra lakshmi
pavithra lakshmi

இந்த திரைப் படத்தில் ஹீரோவாக காமெடி நடிகர் சதீஷ் நடிக்க இருக்கிறார் என கூறப்படுகிறது இந்த திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது இந்த பூஜையில் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார். பவித்ரா லட்சுமி அடுத்தடுத்து ஹீரோயினாக நடிக்க இருக்கிறார் என தகவல் கிடைத்துள்ளது இந்த நிலையில் பவித்ரா லட்சுமி மற்ற நடிகைகளைப் போல் போட்டோ ஷூட் நடத்தி எப்படியாவது நல்ல பட வாய்ப்பை அடைந்துவிட வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருக்கிறார்.

அந்த வகையில் ரம்யா பாண்டியனை ஓர கட்டுவதற்காக மொட்டை மாடியில் போட்டோ ஷூட் நடத்தி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அதை பார்த்த ரசிகர்கள் ரம்யா பாண்டியனுக்கே டாஃப் கொடுப்பீர்கள் போல என கமன்ட்  செய்து வருகிறார்கள்.

pavithra lakshmi
pavithra lakshmi