குக் வித் கோமாளி புகழ் மனைவி வளைகாப்பிற்கு வந்த விஜய் டிவி பிரபலங்கள்.! யார் யார் வந்துள்ளார்கள் பார்த்தீர்களா.

pugazh
pugazh

Pugazh wife baby shower : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டவர் புகழ் இவர் இதற்கு முன்பு கலக்கப்போவது யாரு ஸ்டாண்ட் அப் காமெடி ஷோ என பல ரியாலிட்டி ஷோக்கலில் கலந்து கொண்டவர். குக் வித் கோமாளியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார். இந்த நிலையில் புகழ் நீண்ட நாள் காதலியான பென்சியை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களின் திருமண புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது இந்த நிலையில் சமீபத்தில் புகழ் தன்னுடைய மனைவி கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார். அதனை ஒரு புகைப்படத்துடன் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

அந்த புகைப்படத்தில் அவர் கூறியதாவது என்னுடைய வளர்ச்சியில் வழி துணையாய் வந்தவள், இப்பொழுது என்னை என் வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளார், இத்தனை நாட்களில் எத்தனையோ பரிசுகளை எனக்கு அளித்தவள், ஆனால் இன்று அவள் அளித்த பரிசுக்கு ஈடு இணையே இல்லை.

என் அனைத்து சுக துக்கங்களிலும் என்னுடன் இருந்தவள் நீ, இனி இன்னொரு உயிரும் நம்முடன் இருக்கப் போகிறது என்று நினைக்கும் பொழுது இதைவிட பெரிய மகிழ்ச்சி இந்த உலகத்தில் வேறு எதுவும் இல்லை என்னை தகப்பன் ஆக்கிய என் தாயுமானவளுக்கு அன்பு முத்தங்கள் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் என தன்னுடைய திருமண நாளில் புகழ் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் புகழின் மனைவி பென்சிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை வளைகாப்பு விழா சென்னையில் நடைபெற்றுள்ளது. இதில் ஷிவாங்கி, நாஞ்சில் விஜயன், என பலர் நேரில் கலந்து கொண்டார் அது மட்டும் இல்லாமல் இன்னும் விஜய் டிவி பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டார்கள் இதோ புகைப்படங்கள்.

sivangi
sivangi

மேலும் புகழ் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் என் வாழ்விற்கு அர்த்தத்தை தந்தவளே நம் வாழ்க்கை பாதையில் இருவராய் இருந்த நாம் மூவராய் பயணிக்கும் நாட்கள் மிக அருகில் நமக்கான இந்த பிரசவத்தில் எப்பொழுதும் உனக்கு துணை நிற்பேன் வந்து வாழ்த்திய உள்ளங்களுக்கு நன்றி எனக் கூறியுள்ளார்.

pugazh
pugazh