முன்னணி நடிகருடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட குக் வித் கோமாளி புகழ் மற்றும் பிரபலங்கள்.!

0

பிரபல விஜய் டிவியில் பல ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பொதுவாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அதில் காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் இருப்பது வழக்கம்.

அந்த வகையில் சமீபத்தில் மிகவும் ட்ரெண்டிங்கான நிகழ்ச்சியாக வலம் வந்து கொண்டிருப்பது குக் வித் கோமாளி. பிக்பாஸ் நிகழ்ச்சி எந்த அளவிற்கு பிரபலமடைந்ததோ அதே அளவிற்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியும் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது.

இந்நிகழ்ச்சி சமையல் நிகழ்ச்சியாக இருந்தாலும் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என மிகவும் மகிழ்ச்சியாகவும்,காமெடியாகவும் இருந்ததால் ரசிகர்கள் இந்நிகழ்ச்சியை தவறாமல் பார்ப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். அந்தவகையில் கடந்த இரண்டு வருடங்களாக நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

முதல் சீசனை விடவும் இரண்டாவது சீசன் மாபெரும் வெற்றியைப் பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தொடர்ந்து ரசிகர்களின் ஆதரவு அதிக அளவில் கிடைப்பதால் தற்போது இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் இன்னும் சில மாதங்களில் வெளியாக உள்ளது. இரண்டாவது சீசனில் அதிக மதிப்பெண்களை பெற்று கனி வெற்றியாளராக  தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சில வாரங்களுக்கு முன்பு தான் சீசன் 2வின் பைனல் முடிந்தது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலருக்கும் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு குவித்து வருகிறது. அந்த வகையில் பாலா, அஸ்வின், சிவாங்கி, பவித்ரா, தர்ஷா,புகழ் போன்ற பலரும் சினிமாவில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் விஷாலுடன் இணைந்து புகழ்,  சிவாங்கி, பாலா ஆகியோர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி. வருகிறது. இதோ அந்த புகைப்படம்.