இதுக்கும் ஏதாச்சும் கண்டுபிடிச்சு காப்பி அடிக்காமல் இருந்தா சரி.!! வீடியோவை வெளியிட்டு சிரிச்சு சிரிச்சு ரசிகர்களை சிதறடித்த குக் வித் கோமாளி புகழ் பவித்ரா.!

பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பப்பட்டு வரும் நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியும் ஒன்று இந்த நிகழ்ச்சி மிகவும் சுவாரஸ்யமாக கொண்டு செல்வதால் ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை ஆவலுடன் பார்க்கிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான பவித்ரா மீது புகழ் மிகவும் ரொமான்ஸ் செய்வதும் அதேபோல் பவித்ரா புகழ் மீது ரொமான்ஸ் செய்வதும் ரசிகர்களை மீண்டும் மீண்டும் பார்க்க வைத்துள்ளது. அப்படி இருக்கும் வகையில் பவித்ரா லட்சுமி தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார்.

அந்த வீடியோவில் தெளிவான வீடியோ என்று அறிவாளி தனமாக ஏதோ பண்ணி இருக்கிறேன் இதுக்கும் ஏதாச்சும் கண்டுபிடித்து காப்பி அடிக்காமல் இருந்தால் சரி என தலைப்புடன் பதிவு செய்யப்பட்டுள்ளார். அது மட்டுமில்லாமல் அந்த வீடியோவில் நான் எனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவு செய்து இருந்தேன் அந்த வீடியோ சிறிது நேரத்திலேயே பல பக்கங்களில் பகிரப்பட்டு வருகிறது.

அதுமட்டுமில்லாமல் நானே பதிவு செய்தது போல் அமைக்கப்பட்டு அந்த வீடியோ வைரல் ஆகியது. ஆனால் இது மட்டும் தான் என்னுடைய அதிகாரபூர்வ கணக்கு எனவும் மற்ற பக்கங்கள் என் மீது வைத்துள்ள அன்பின் காரணமாக ஒரு சிலர் ஆரம்பித்த பக்கங்கள் எனவும் கூறியுள்ளார்.

மேலும் என் அதிகாரப்பூர்வ பக்கங்களை காட்டிலும் மற்ற பக்கங்களை நடத்துபவர்கள் என்னை விட மிகவும் ஆக்டிவாக இருப்பதால் என்னை விட அதிக பார்வையாளர்களை வைத்துள்ளார்கள் அதற்காக நன்றி கூறி பெருமை கொள்கிறேன் என கூறியுள்ளார்.

அதேபோல் என்னுடைய அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிடப்படும் வீடியோவிற்கு மட்டும் நான் பொறுப்பு ஏற்கிறேன். எனவும் குறிப்பிட்டு கூறியுள்ளார்.

Leave a Comment