பிரபல நடிகருடன் இணையவிருக்கும் குக் வித் கோமாளி சிவாங்கி.!

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமாகி தற்போது பல நடிகர்கள்,நடிகைகள் உருவாகி வருகிறார்கள் அந்த வகையில் சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது இயல்பான பேச்சும் குழந்தைத்தனமான செயலும் செய்து காட்டி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சிவாங்கி.

இவர் அதனை தொடர்ந்து விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி இரண்டாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்குபெற்று ஒவ்வொரு டாஸ்கிலும் வெற்றி பெற்று வந்தார்.

இந்த இரண்டாவது சீசனில் இவர் தனது குழந்தைத்தனமான செயல்கள்,காமெடி தனமான பேச்சு செய்து காட்டிய ரசிகர்களிடையே பிரபலம் ஆகிவிட்டார் என்று தான் கூற வேண்டும் ஆனாலும் இவரை ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

மேலும் இந்த சீசனில் கனி என்பவர் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது பலருக்கும் தெரிந்ததுதான் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு சிவாங்கி பல திரைப்படங்களில் நடிக்க கமிட்டாகி வருகிறாராம் அதிலும் குறிப்பாக இவர் பிரபல முன்னணி நடிகர்களுடன் இனிய போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

utha nithi stalin
utha nithi stalin

இந்நிலையில் தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்துக் கொண்ட நடிகர் தான் உதயநிதி ஸ்டாலின் இவர் ஆசுமான் குரானா மற்றும் இஷா தல்வார் ஆகியோர் நடிப்பில் இந்தியில் வெளியாகி ஆர்டிகில் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாக உள்ளதாம் இந்த திரைப்படத்தில் சிவாங்கி இவருடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறாராம்.இந்த தகவல் தற்போது சிவாங்கி ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருவது மட்டுமல்லாமல் பலரும் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

Leave a Comment